வெளியிடப்பட்ட நேரம்: 14:11 (27/04/2017)

கடைசி தொடர்பு:14:30 (27/04/2017)

எனது உத்தரவை நிறைவேற்றாவிட்டால்..! சிபிஎஸ்இ இயக்குநரை எச்சரிக்கும் உயர்நீதிமன்ற நீதிபதி

'நீட் தேர்வுக்கு தாமதமாக விண்ணபித்தவர்களின் விண்ணப்பங்களை ஏற்க வேண்டும்' என சிபிஎஸ்இ இயக்குநருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

சென்னை உயர்நீதிமன்றம்


தொழில்நுட்பக் கோளாறால் நீட் தேர்வுக்கு உரிய நேரத்தில் விண்ணப்பிக்க முடியாதவர்களின் விண்ணப்பங்களை ஏற்கக்கோரிய வழக்கு, சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி புஷ்பா, 'தொழில்நுட்பக் கோளாறால் தாமதமாக விண்ணப்பிக்கப்பட்ட 38 பேரின் விண்ணப்பங்களை சிபிஎஸ்இ இயக்குநர் ஏற்க வேண்டும்' என உத்தரவிட்டதோடு, இந்த உத்தரவைக் கண்டிப்பாக ஏற்க வேண்டும். உத்தரவு ஏற்கப்படாவிட்டால், சிபிஎஸ்இ இயக்குநர் நேரில் ஆஜராக வேண்டும் என எச்சரித்துள்ளார்.