செப்டம்பர் 2016 முதல் ஏப்ரல் 2017 வரை... அ.தி.மு.கவின் 13 நெருக்கடி இரவுகள்..! #VikatanInfograph

                           

மிழக அரசியலில் பல இரவுநேர பரபரப்புகள் மக்களை பாடாய்ப் படுத்தியிருக்கிறது... சில ஆண்டுகள் முன்னே சென்றால், தி.மு.க. தலைவரான கருணாநிதி நள்ளிரவில் கைது, லட்சக் கணக்கான அரசு ஊழியர்கள் பணியிலிருந்து டிஸ்மிஸ்... அரசு தாடண்டர் குடியிருப்பில் நுழைந்து நள்ளிரவில் ஊழியர்கள் கை-கால் உடைப்பு, சிறை, இளம்பெண் ஷெரீனா மீது கஞ்சா வழக்குப் பதிவு செய்து நள்ளிரவில் கைது என பட்டியல் நீளமான காமிக்ஸ் போல ஓடிக் கொண்டே இருக்கும்... இவையனைத்தும் ஜெயலலிதா முதல்வராக இருந்த ஏக காலத்தில் நடந்தவை. முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவனையில் இருந்தபோதும், அதன்பின்னரும்  (செப்டம்பர் 2016 டு ஏப்ரல் 2017") ஆறுமாத தமிழக ஆட்சியில் நடந்துள்ள 13 சம்பவங்களின் தொகுப்பு இங்கே....

(1) 2016 செப்டம்பர் 22 - இரவு, முதல்வராக இருந்த ஜெயலலிதா அப்போலோவில் அனுமதி.    

(2)  2016 டிசம்பர் 5 - நள்ளிரவு, ஜெயலலிதா இறந்ததாக அறிவிப்பு.  

(3) 2016 டிசம்பர் 6 - நள்ளிரவு, தமிழக முதல்வராக ஓ.பி.எஸ். பதவியேற்பு.  

(4) 2017 பிப்ரவரி 5 - இரவு, சசிகலா சட்டப்பேரவைத் தலைவராகத் தேர்வு. ஓ.பி.எஸ். ராஜினாமா.  

(5) 2017 பிப்ரவரி 7 நள்ளிரவில், சசிகலா முதல்வராகப் பதவியேற்கச் சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபம் தயாரானது.

(6) 2017 பிப்ரவரி 8 - இரவு, பொறுப்பு முதல்வர் ஓ.பி.எஸ்., ஜெ. சமாதியில் தியானம், பேட்டி.  

(7) 2017 பிப்ரவரி 8 - நள்ளிரவு, போயஸ் கார்டனில் சசிகலா பேட்டி.  

(8) 2017 பிப்ரவரி 10 - நள்ளிரவு, சசிகலா ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் கூவத்தூர் சொகுசு விடுதிக்குப் பயணம்.

(9) 2017 மார்ச் 7 - ஆர்.கே.நகர்த் தொகுதியில் ஓ.பி.எஸ். ஆதரவாளருக்கு அரிவாள் வெட்டு.    

(10)  2017  மார்ச் 9 - இரவு, ஆர்.கே.நகர் தேர்தலை தேர்தல் கமி‌ஷன் ரத்துசெய்தது. 

(11) 2017 மார்ச்  23 - இரவு, இரட்டை இலைச் சின்னத்தைத் தேர்தல் கமி‌ஷன் முடக்கியது.  

(12) 2017 ஏப்ரல் 18 - அ.தி.மு.க. அம்மா அணியில் இருந்து டி.டி.வி.தினகரனை நீக்குவதாக ஓ.பி.எஸ். அணி அறிவிப்பு.  

(13) 2017 ஏப்ரல் 25 - இரட்டை இலைச் சின்னம் பெற லஞ்சம் கொடுக்க முயன்றதாக டி.டி.வி.தினகரன், நள்ளிரவு கைது.

 

அதிமுக


ந.பா.சேதுராமன்


 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!