இணையத்தில் வெளியானது 'பாகுபலி- 2'... அதிர்ச்சியில் படக்குழு!

பிரமாண்ட பட்ஜெட்டில் உருவான 'பாகுபலி-2' , இன்று உலகம் முழுவதும் ரிலீஸாக இருந்தது. சில நாடுகளில், நேற்று இரவே  படம் வெளியாகி, ரசிகர்களின் கைதட்டல்களுடன் திரை அரங்கம் நிரம்பிக்கொண்டிருக்கிறது.

இணையத்தில் வெளியான பாகுபலி 2

தமிழகத்தின் பல திரையரங்குகளில், இன்று காலை 4.30 மணியில் இருந்து காட்சிகள் திட்டமிடப்பட்டு இருந்தன. இந்த நிலையில், தயாரிப்பாளர்களுக்கும் விநியோகஸ்தர்களுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்னை காரணமாக ,'பாகுபலி-2' திரைப்படத்தின் காலைக் காட்சிகள் ரத்தானதாகத் தகவல்கள் வந்துள்ளன. காலை 9.30 மணி வரை புக் செய்யப்பட்டிருந்த காட்சிகள், பல ஊர்களில் ரத்து செய்யப்பட்டுவிட்டன. இதனால், திரையரங்குகளுக்கு காலையிலேயே சென்ற ரசிகர்கள், ஏமாற்றத்துடன் திரும்பினர்.

இது இப்படியிருக்க, திரைப்படத்தின் பெரும் எதிரியாகச் சொல்லப்படும் டோரென்ட் தளங்களில், படம் இன்று காலை வெளியாகிவிட்டது. தமிழகத்தின் பல பகுதிகளில் இன்னும் படமே வெளிவராதபோது, இப்படி முழுப் படமும் இணையத்தில் வெளியாகி இருப்பது தயாரிப்பாளர்கள் தரப்பைப் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!