சுகேஷ் சந்திரசேகருக்கு அடுத்த சிக்கல்!

இரட்டை இலைச் சின்னம் பெறுவதற்காக, தினகரன் லஞ்சம் கொடுத்ததாக பகீர் கிளப்பியவர் சுகேஷ் சந்திரசேகர். இந்த வழக்கில் அவருக்கு விதிக்கப்பட்டிருந்த நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவதாக இருந்தது. இதைத்தொடர்ந்து அவருக்கு மே 12-ம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டது.

Sukesh


அவரின் பின்னணி குறித்த தகவல்கள், அனைத்தும் அதிர்ச்சியளிக்கும் வகையில் இருந்தது. இந்நிலையில், கனரா வங்கிக்கு ரூ.19.22 கோடி இழப்பு செய்ததாக சுகேஷ் உள்ளிட்ட மூன்று பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருந்தது.  இந்த வழக்கில், சுகேஷை, மூன்றாவது குற்றவாளியாக, சி.பி.ஐ வழக்குப்பதிவு செய்து இருந்தது. இதையடுத்து, அவரை நேரில் ஆஜராக பலமுறை கூறியும் சுகேஷ் ஆஜராகவில்லை.


இந்நிலையில், இந்த வழக்கு சென்னை சி.பி.ஐ நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அவருக்கு ஜாமீனில் வெளிவர முடியாது பிடிவாரன்ட்டை பிறப்பித்து, சி.பி.ஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, இந்த வழக்கு விசாரணையை வருகின்ற ஜூன் 9-ம் தேதிக்கு, ஒத்திவைத்தது நீதிமன்றம்.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!