வெளியிடப்பட்ட நேரம்: 20:40 (28/04/2017)

கடைசி தொடர்பு:20:40 (28/04/2017)

தஞ்சையில் எடப்பாடி பழனிசாமி உருவ பொம்மை எரிப்பு!

விவசாயிகள் குடும்ப பிரச்னை காரணமாக தற்கொலை செய்துக்கொண்டனர் என பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ததைக் கண்டித்து தஞ்சையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உருவபொம்மையை எரித்து ஆர்ப்பாட்டம் நடந்துள்ளது.

effigy

தமிழகத்தில் பருவமழை பொய்த்ததனால் வறட்சியின் காரணமாக சுமார் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டு வந்தது. இதையடுத்து தமிழகத்தின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் இன்று பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. இதில் விவசாயிகள் உடல்நலக் குறைவு, குடும்ப பிரச்னை காரணமாக தான் தற்கொலை செய்துகொண்டனர் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையடுத்து தமிழக அரசின் இந்நடவடிக்கை மீது பல தரப்பில் இருந்து கண்டனங்கள் எழுந்த வண்ணம் இருக்கின்றன. இந்நிலையில் தஞ்சையில் தவறான தகவல் அளிக்கப்பட்டதைக் கண்டித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி  உருவ பொம்மையை எரித்து ஆர்ப்பாட்டத்தில் இறங்கியுள்ளனர் விவசாயிகள் சங்கத்தினர். மேலும் தஞ்சை ரயில் நிலையத்தின் முன்பு அவர்கள் கறுப்புக் கொடிகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.