2 லட்சம் பேர் பங்கேற்கும் டெட் தேர்வு

தமிழ்நாடு அரசுத் தேர்வுத் துறை சார்பில் தமிழகம் முழுவதும் ஆசிரியர் தகுதித் தேர்வு இன்று நடைபெறுகிறது. இதற்காக தமிழகம் முழுவதும் 598 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னையில் அசோக் நகர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கோடம்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளி, விருகம்பாக்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்பட 27 மையங்களில் இந்தத் தேர்வு நடக்கிறது.

TET

இந்நிலையில், சென்னை அசோக் நகர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தேர்வு மேற்பார்வை அதிகாரி கண்ணப்பன் ஆய்வு மேற்கொண்டார். பின் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், 'தமிழகம் முழுவதும், இரண்டு லட்சத்து 37ஆயிரம் பேர் இந்தத்தேர்வை எழுதுகின்றனர். சென்னையில் 40 ஆயிரம் பேர்  தேர்வு எழுதுகின்றனர். 


தேர்வு கண்காணிப்புப் பணியில் 500-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் நடைபெறும் தேர்வுக்கு, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேர்வு எழுதக்கூடியவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.. 


மேலும், அனைத்து கல்வித் துறை அலுவலர்கள், மாவட்ட ஆட்சியர்கள்  என 3 ஆயிரம் பேர் சிறப்பு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அசோக்நகர் பள்ளியில் 500-க்கும் மேற்பட்டோர் தேர்வு எழுதுகின்றனர். இன்று இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வு நடைபெறுகிறது. நாளை பட்டதாரி ஆசியர்களுக்கான தகுதித் தேர்வு நடைபெறவுள்ளது' என்றார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!