புதிதாக 1,223 செவிலியர்கள் நியமனம்! அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

இந்த ஆண்டு, 'புதிதாக அரசு செவிலியர்கள் 1,223 பேர் தேர்வுசெய்யப்பட இருக்கின்றனர்' என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

புதுக்கோட்டையில் இன்று செய்தியாளர்களிடம் பேசியபோது, 'இந்த ஆண்டு, 20 ஆரம்ப சுகாதார மையங்கள் திறக்கப்படும் என்றும் அடுத்தவாரம், 250 அரசு மருத்துவர்களுக்கு கலந்தாய்வில் பணி நியமன ஆணை வழங்கப்படும்' என்றும் தெரிவித்தார்.

'இந்த ஆண்டு, புதிதாக அரசு செவிலியர்கள் 1,223 பேர் தேர்வுசெய்யப்பட இருக்கின்றனர் என்று கூறிய அமைச்சர், நாட்டிலேயே தமிழகத்தில்தான் முதன்முறையாக மருத்துவப் பணியாளர்கள் தேர்வுவாரியம் அமைக்கப்பட்டது என்றும், இதன்மூலம் 9190 செவிலியர்கள் உள்பட 17,914 மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்' என்றும் கூறினார்.

மேலும்,' மருத்துவ மேற்படிப்புக்கு இந்த ஆண்டு, கூடுதலாக 300 இடங்கள் பெறப்பட்டுள்ளன' என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!