வெளியிடப்பட்ட நேரம்: 17:08 (29/04/2017)

கடைசி தொடர்பு:17:29 (29/04/2017)

மணல் குவாரிகள் திடீர் மூடல்! 10 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம்

மணல் தட்டுப்பாடு காரணமாக, தமிழகத்தில் செயல்பட்டுவந்த ஒன்பது மணல் குவாரிகள் மூடப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


தமிழகம் முழுவதும் சட்ட விரோதமான முறையில் ஏராளமான மணல் குவாரிகள் செயல்படுவதாகவும், முறையான மணல் குவாரிகளில் அளவுக்கு மீறி மணல் அள்ளுவதாகவும் அடிக்கடி புகார்கள் வருகின்றன. இத்தகையை காரணங்களினால், தமிழகத்தில் சட்ட விரோதமாகச் செயல்படும் மணல் குவாரிகளைத் தடைசெய்ய வேண்டும் என்று தி.மு.க பேச்சாளர் சூர்யா வெற்றிகொண்டான் என்பவரும், ராதாபுரம் தொகுதி முன்னாள் எம்எல்ஏ., அப்பாவு என்பவரும் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளனர். அந்த வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்த நிலையில், மணல் தட்டுப்பாடு காரணமாக தமிழகத்தில் செயல்படும். ஒன்பது மணல் குவாரிகள் மூடப்பட்டுள்ளன. விழுப்புரம், அரியலூர், திருச்சி, கரூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள ஒன்பது மணல் குவாரிகள் இன்று மூடப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கைகுறித்து மணல் லாரிகள் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் முத்து ரத்தினம், தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், 'இந்த நடவடிக்கையால் 10 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே, தட்டுப்பாடு காரணமாக ஒரு லோடு 35,000 ரூபாய் வரை விற்கப்படுகிறது. மணல் குவாரிகளை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.