வெளியிடப்பட்ட நேரம்: 17:03 (29/04/2017)

கடைசி தொடர்பு:17:18 (29/04/2017)

சிறைப்பிடித்தது 133 படகு; விடுவிப்பது 20 படகு- இலங்கை அரசு திடீர் முடிவு!

தமிழக மீனவர்களுக்குச் சொந்தமான 20 படகுகளை விடுவிக்க இலங்கை அரசு முடிவுசெய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

boats

தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்களை எல்லை தாண்டியதாகக் குற்றம் சாட்டி, இலங்கைக் கடற்படை தொடர்ந்து கைதுசெய்துவந்தது. மேலும், கைதுசெய்யப்பட்டவர்களின் படகுகளையும் இலங்கை அரசு பறிமுதல்செய்துவந்தது. இதனிடையே, மீனவர் பிரிட்ஜோ மரணத்துக்குப் பிறகு, இலங்கைக் கடற்படையின் அடக்குமுறைகள் சற்று தணிந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், இலங்கைக் கடற்படையால் சிறைபிடித்துவைக்கப்பட்ட தமிழக மீனவர்களின் 20 படகுகளை விடுவிப்பதாக இலங்கை அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. 133 படகுகளில், நிபந்தனையின் அடிப்படையில் 20 படகுகளை மட்டும் விடுவிப்பதாகக் கூறப்பட்டுள்ளது. வடக்கு மாகாண மீனவர்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குப் பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இதனிடையே, 'மோடியின் இலங்கைப் பயணத்தின்போது  படகுகளை விடுவிப்பது தொடர்பான பேச்சு இடம் பெறாது' என இலங்கை அரசு சார்பில் அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க