சீமைக் கருவேல மரங்களை அழிக்க வேண்டாம்! பொன்ராஜ் வேண்டுகோள்!

சீமைக் கருவேல மரங்களை அழிக்க வேண்டும் எனத் தவறான தகவல் பரப்பப்பட்டு வருவதாக, அப்துல் கலாமின் ஆலோசகர் பொன்ராஜ் கூறியுள்ளார்.

juliflora

சீமைக் கருவேல மரங்கள் நிலத்தடி நீரை உறிஞ்சிவிடும், காற்றில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சிவிடும், அது மண்ணுக்கும் மக்களுக்கும் கேடு என்ற விழிப்பு உணர்வு, சமீப காலமாக அதிகளவில் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து, பல ஊர்களில் பல்வேறு சமூக அமைப்புகள் மூலமாகவும் மாணவர்கள் மூலமாகவும் சீமைக் கருவேல மரங்களை அழிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், சீமைக் கருவேல மரங்களை அழிக்க வேண்டாம் எனக் கூறியுள்ளார், 'அப்துல் கலாம் லட்சிய இந்திய கட்சி'யின் தலைவர் பொன்ராஜ். சீமைக் கருவேல மரங்கள், ஏழைகளின் வாழ்வாதாரத்துக்கு ஒரு உத்திரவாதம் எனவும், இதை அழிப்பதன்மூலம் கேஸ் கம்பெனிகள் நமது கிராமத்துக்குள் நுழைய முயற்சிக்கின்றன என்றும் கூறியுள்ளார். மேலும், இதை வேறோடு பிடுங்கி, அழித்து விட்டால், எரிபொருளுக்காக வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யவேண்டிய நிலை ஏற்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!