கேரள அமைச்சருக்கு எதிராக தனி ஒருவராக உண்ணாவிரதம் இருக்கும் லதா!

கேரள அமைச்சர் மணியின் சர்ச்சைக்குரிய பேச்சைக் கண்டித்து, இடுக்கி மாவட்டத்தில் உள்ள லதா என்கிற பெண், தனியாக உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டுவருகிறார்.

பெண்கள்

இடுக்கி, மூணாறு உள்ளிட்ட பகுதிகளில் தேயிலைத் தோட்ட வேலைகளைச் செய்துவரும் பெண்கள், ஊதியஉயர்வு கேட்டு போராட்டம் நடத்தி வெற்றிக் கண்டனர். இதையடுத்து, போராடிய பெண்களை கேரள மின்துறை அமைச்சர் அவதூறாகப் பேசி, சர்ச்சையைக் கிளப்பினார். கேரள அமைச்சரின் பேச்சைக் கண்டித்து, 'பெண்கள் ஒற்றுமை' அமைப்பின் சார்பில் உண்னாவிரதப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.

இதனிடையே, கடந்த ஏழு நாள்களாகப் போராட்டத்தில் ஈடுபட்டுவந்த கோமதி, ராஜேஸ்வரி, கெளசல்யா ஆகியோரின் உடல்நிலை மோசமடைந்தது. இதையடுத்து, காவல்துறையினரால் வலுக்கட்டாயமாகக்  கைதுசெய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில், லதா என்கிற பெண் மட்டும் தனியாக உண்ணாவிரதப் போராட்டத்தை தற்போது மேற்கொண்டு வருகிறார். கேரள அமைச்சர் மன்னிப்புக் கேட்கும் வரை போராட்டம் தொடரும் என அவர் கூறியுள்ளார்.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!