வெளியிடப்பட்ட நேரம்: 23:09 (29/04/2017)

கடைசி தொடர்பு:23:07 (29/04/2017)

12-ம் வகுப்பு பொதுத்தேர்வு: தவறான வினாவுக்கு மதிப்பெண் தர உத்தரவு!

12-ம் வகுப்பு பொதுத்தேர்வில், விலங்கியல் பாடத்தில் தவறாகக் கேட்கப்பட்ட வினாவுக்கு, ஒரு மதிப்பெண் தர உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

exam

2016-2017-க்கான 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு, கடந்த மார்ச் 2ல் தொடங்கியது. தமிழகம் முழுவதும் சுமார் 9 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர். இதனிடையே நடைபெற்ற விலங்கியல் தேர்வில், 16-வது வினாவுக்கு கொடுக்கப்பட்டிருந்த, தேர்ந்தெடுத்து எழுதவேண்டிய விடைகள், தவறாக அச்சிடப்பட்டிருந்தன. இதனால், அனைத்து மாணவர்களும் 16-வது கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் விட்டுவிட்டனர்.

இதுகுறித்து, உயர்நீதிமன்றத்தில் மாணவர்கள் தரப்பில் வழக்குத் தொடரப்பட்டது. இன்று அந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி, 'தவறாகக் கேட்கப்பட்ட வினாவுக்கு கட்டாயமாக ஒரு மதிப்பெண் வழங்க வேண்டும் என தீர்ப்பளித்தார். மேலும் பள்ளிக்கல்வித்துறை வினாத்தாள் தயார்செய்யும்போது கவனமாக இருக்க வேண்டும்' என்றும் அறிவுறுத்தப்பட்டது.