வெளியிடப்பட்ட நேரம்: 22:28 (29/04/2017)

கடைசி தொடர்பு:22:28 (29/04/2017)

கொடநாடு எஸ்டேட் கொலை வழக்கில் 4 பேர் கைது

ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட் காவலாளி கொலை வழக்கில், 4 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

kodanadu

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 24-ம் தேதி, காவலாளி ஓம்பகதூர் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். இதையடுத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், முக்கிய குற்றவாளியாகக் கருதப்பட்ட கனகராஜ் விபத்தில் உயிரிழந்தார்.  மேலும், அவரின் நண்பர் சயான், மற்றொரு விபத்தில் காயமடைந்தார். இதில், அவரது மனைவி மற்றும் மகள் உயிரிழந்தனர்.

இந்த நிலையில், கொலை வழக்கில் தொடர்புடைய நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதுகுறித்து நீலகிரி எஸ்பி முரளிரம்பா கூறுகையில், 'கொலைவழக்கில் சம்பந்தப்பட்ட தீபு, சதீஷன், சந்தோஷ், உதயகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். முதற்கட்ட விசாரணையில் ஜெயலலிதா, சசிகலா அவரிகளின் அறைகளை உடைத்து ஐந்து கைக் கடிகாரங்கள், ஒரு கிறிஸ்டல் பொருளைத்  திருடிச்சென்றதாகக் கூறியுள்ளனர். மேலும், ஐந்து பேர் தலைமறைவாக உள்ளனர்' எனக் கூறியுள்ளார். இதனிடையே விபத்தில் மரணமடைந்த சயானின்  மனைவி, மகளின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக திருச்சூர் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளது.