காவலாளி கொலை வழக்கு : கைதானவர்களை கொடநாடு எஸ்டேட்டுக்கு அழைத்து சென்று விசாரணை

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 24-ம் தேதி, காவலாளி ஓம்பகதூர் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். இதையடுத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், முக்கிய குற்றவாளியாகக் கருதப்பட்ட கனகராஜ் விபத்தில் உயிரிழந்தார்.  மேலும், அவரின் நண்பர் சயான், மற்றொரு விபத்தில் காயமடைந்தார். இதில், அவரது மனைவி மற்றும் மகள் உயிரிழந்தனர்.

Kodanad Estate

இந்த நிலையில், கொலை வழக்கில் தொடர்புடைய நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இதுகுறித்து நீலகிரி எஸ்.பி முரளிரம்பா கூறுகையில், 'கொலைவழக்கில் சம்பந்தப்பட்ட தீபு, சதீஷன், சந்தோஷ், உதயகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். முதற்கட்ட விசாரணையில் ஜெயலலிதா, சசிகலா ஆகியோரின் அறைகளை உடைத்து ஐந்து கைக் கடிகாரங்கள், ஒரு கிறிஸ்டல் பொருளைத் திருடிச்சென்றனர். மேலும், ஐந்து பேர் தலைமறைவாக உள்ளனர்' எனக் கூறினார்.


இந்தநிலையில் கைது செய்யப்பட்ட நான்கு பேரையும், இன்று கொடநாடு எஸ்டேட்டுக்கு அழைத்து சென்று காவல்துறையினர் நீண்ட நேரம் விசாரணை நடத்தினர். இதையடுத்து, கைது செய்யப்பட்ட நான்கு பேரும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!