மருத்துவ இடஒதுக்கீடு விவகாரம்: நாளை முதல் போராட்டம் தீவிரமடையும்

மருத்துவ மேற்படிப்புக்கான இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதை கண்டித்து மே 8-ஆம் தேதி அடையாள வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறவுள்ளதாக மருத்துவ சங்கத்தின் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

doctors

அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு பட்ட மேற்படிப்பில் சேர தமிழக அரசு வழங்கிய 50% இடஒதுக்கீட்டை நீதிமன்றம் ரத்து செய்தது. இதை கண்டித்து கடந்த 10 நாட்களாக தமிழகம் முழுவதும் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதனிடையே சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அமைச்சர் விஜயபாஸ்கருடன்  நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

இந்நிலையில் நாளை முதல் தமிழகத்தில் போராட்டம் தீவிரமடையும் என மருத்துவ சங்க மாநிலத் தலைவர் செந்தில் கூறியுள்ளார். இது குறித்து மதுரையில் பேட்டியளித்த அவர்,' மருத்துவ இடஒதுக்கீட்டுக்கு அவசர சட்டம் இயற்ற கோரி நாளை முதல் சாலை மறியல் போராட்டங்களில் ஈடுபட போகிறோம்' என கூறியுள்ளார். மேலும், மே 8 அன்று ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் நடைபெறவுள்ளதாகவும் மே 3 முதல் அவசர சிகிச்சைகளை தவிர பிற சிகிச்சைகளை புறக்கணித்து போராட்டம் நடைபெறவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!