மரத்தில் ஏறிய நெடுவாசல் மக்கள்! 20-வது நாளாக தொடரும் போராட்டம்

ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிராக போராடி வரும் நெடுவாசல் மக்கள் இன்று மரத்தில் ஏறி போராட்டம் நடத்தினர். சுமார் 15 பேர் மரத்தில் ஏறி இத்திட்டத்துக்கு எதிரான முழக்கங்களை அவர்கள் எழுப்பினர்.

neduvasal

இந்தியா முழுவதும் ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டத்தின் அடிப்படையில் நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் எடுப்பதாக திட்டமிடப்பட்டது. இதையடுத்து நெடுவாசல் கிராம மக்களும் பல அமைப்புகளும் ஒன்றிணைந்து போராட்டத்தில் குதித்தனர். இதையடுத்து மத்திய அமைச்சர்களுடனான பேச்சுவார்த்தைக்கு பிறகு இவர்கள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

இந்நிலையில், ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிராக மீண்டும் நெடுவாசலில் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. தூக்குப்போடுதல், முட்டிப்போட்டுப் பிரார்த்தனை, அங்கப் பிரதட்சணம் செய்தல் என விதவிதமாக ஒவ்வொரு நாளும்  நூதன போராட்டங்களை நெடுவாசல் மக்கள் நடத்தி வருகின்றனர். இதனிடையே இன்று 20-வது நாளாக போராடி வரும் அவர்கள் மரத்தில் ஏறி போராட்டம் நடத்தினர். மேலும் மரத்தில் ஏறிய இவர்கள் நெடுவாசல் திட்டத்துக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். 20 நாளாக போராடி வரும் இவர்களை அரசாங்கம் கண்டுக்கொள்ளத் தவறியுள்ளதாக கிராம மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும் தொடர்ந்து போராட்டம் நடைபெறும் எனவும் நெடுவாசல் மக்கள் கூறியுள்ளனர்.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!