வெளியிடப்பட்ட நேரம்: 20:45 (01/05/2017)

கடைசி தொடர்பு:09:19 (02/05/2017)

தமிழக மீனவர்களுக்கு 15 நாள் இலங்கையில் நீதிமன்றக் காவல்

இன்று அதிகாலை கைதுசெய்யப்பட்ட தமிழக மீனவர்களுக்கு, 15 நாள் நீதிமன்றக் காவல் விதித்துத் தீர்ப்பளித்துள்ளது, மன்னார் நீதிமன்றம். 

சிறை

தனுஷ்கோடிக்கும் தலைமன்னாருக்கும் இடையே, இன்று அதிகாலை தங்கச்சிமடத்தைச் சேர்ந்த மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கைதுசெய்தனர்.  எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதில், தங்கச்சிமடத்தைச் சேர்ந்த அபிஷேக், ஆரோக்கியம், சந்திய மிக்சன், ராஜகுணசேகரன், அந்தோணி ஆகிய ஐந்து மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கைதுசெய்ததோடு, ஒரு நாட்டுப்படகையும் பறிமுதல்செய்தனர். 

எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கைதுசெய்யப்பட்ட ஐந்து பேரும், இலங்கை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதையடுத்து, கைதுசெய்யப்பட்ட ஐந்து மீனவர்களுக்கு, 15 நாள் நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது. ஐந்து மீனவர்களையும் வவுனியா சிறையில் மே 15 வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.