'டி.டி.வி.தினகரனும் எடப்பாடி பழனிசாமியும் கூட்டாளிகள்' - போட்டு உடைத்த ஓ.பன்னீர்செல்வம்

மே தின பொதுக்கூட்டத்தில் பேசியுள்ள முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், 'டி.டி.வி.தினகரனும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் கூட்டாளிகள்', எனக் கூறியுள்ளார்.

ops

சென்னை ஆர்.கே நகரில் அ.தி.மு.க புரட்சித்தலைவி அம்மா கட்சி சார்பில் மே தின பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், அந்த அணியின் முக்கிய நிர்வாகிகளான ஓ.பன்னீர்செல்வம், மதுசூதனன், முனுசாமி, பொன்னையன், நத்தம் விஸ்வநாதன், மாஃபா பாண்டியராஜன், செம்மலை உட்பட பலர் பங்கேற்றுப் பேசினர். இறுதியாகப் பேசிய முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, தினகரன், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மீது கடுமையான விமர்சனங்களை அடுக்கினார். 

ops

ஓ.பன்னீர் செல்வம் பேசும்போது, 'டி.டி.வி.தினகரனும் எடப்பாடியும் கூட்டாளிகள்.  சசிகலா பொதுச்செயலாளர் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உட்பட அனைவரும் தேர்தல் ஆணையத்தில் பிரமாணப்பத்திரம் கொடுத்துள்ளனர். அதில், எடப்பாடி பழனிசாமி பெயரையும் சேர்த்துக்கொடுத்துள்ளனர். இந்த நிலையில் இரு அணிகள் இணைவதுகுறித்த பேச்சுவார்த்தையை எப்படி நம்பிக்கையுடன் நடத்த முடியும்? பேச்சுவார்த்தை என்ற பெயரில் கபட நாடம் நடத்துகின்றனர்', எனப் பேசியுள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!