எடப்பாடிக்கு பைத்தியம் ! சொல்கிறார் மதுசூதனன்

 

சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் உள்ள ஏ.இ.கோயில் தெருவில், இன்று மாலை அ.தி.மு.க புரட்சித்தலைவி அம்மா அணியின் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. 

 

 

ஓ.பி.எஸ் அணியின் மூத்த தலைவர்களில் ஒருவரான இ.மதுசூதனன் கூட்டத்தில் பேசும்போது,'இன்றைய தினம் மே தின விழாவை கொண்டாடுவதற்கு, ஓ.பி.எஸ் அணிக்கு மட்டுமே அருகதை இருக்கிறது. சசிகலாவின் ஆணைப்படி, எம்எல்ஏ    -க்களுக்குப் பணத்தைக் காட்டி, மொத்தமாக கூவத்தூரில் சிறைவைத்திருந்தார்கள். ஆனால், இங்கே கூடியுள்ள மக்கள்வெள்ளத்தைப் பார்த்து, எடப்பாடிகள் தத்தளித்துக்கொண்டிருக்கின்றனர்.

 

Madhusudhanan

 

தேர்தல் கமிஷனுக்கே லஞ்சம் அளித்த தினகரனை, கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் என்பதா? மக்கள் விரோதி எடப்பாடி மூலமாகவும், அமைச்சர்கள் மூலமாகவும், ஆர்.கே நகரில் பணப் பட்டுவாடா செய்துள்ளனர். ஆக, புரட்சித்தலைவரும், புரட்சித்தலைவியும் உட்கார்ந்த இருக்கையில் அமர்ந்துகொண்டு, மனநலம் பாதிக்கப்பட்டவர் போல செயல்படுகிறார். எடப்பாடி, எம்.ஜி.ஆர் தொண்டர்களை நம்பித்தான் கட்சி தொடங்கினார். அந்த ஒன்றரைக் கோடி தொண்டர்கள், தற்போது ஓ.பி.எஸ் பின்னால் உள்ளனர். கோடிகளை நம்பி இல்லாமல், கடைக்கோடி தொண்டனை மட்டும் நம்பி இருக்கிறார் ஓ.பி.எஸ்' என மதுசூதனன் பேசினார்.


அ.தி.மு.க-வின் இரு அணிகளுக்கும் இடையேயான இணைப்புப் பேச்சுவார்த்தை, சுமூகமாகப் போய்க்கொண்டிருக்கிறது என, மாறி மாறி இரு தரப்பிலும் சொல்லி வந்தாலும், நீறுபூத்தநெருப்பு போல ஏதோ ஒன்று உள்ளே கனன்று கொண்டுதான் இருந்தது என்பதை மதுசூதனனின் இந்தப் பேச்சு நிரூபித்துள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!