வெளியிடப்பட்ட நேரம்: 08:37 (02/05/2017)

கடைசி தொடர்பு:08:42 (02/05/2017)

எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று அமைச்சரவைக் கூட்டம் - முக்கிய முடிவுகள் எடுக்க வாய்ப்பு

தமிழகத்தில் நிலவும் பரபரப்பான அரசியல் சூழ்நிலைகளுக்கு மத்தியில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது.


விவசாயிகளின் தொடர் போராட்டம் மற்றும் நீட் தேர்வு விவகாரம் ஆகியவை தொடர் பிரச்னைகளாக இருந்துவருகின்றன. இந்த நிலையில், தமிழக முதலைமச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், இன்று காலை 11 மனியளவில் அமைச்சரவைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடைபெற உள்ளது.

பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. மேலும், மானிய கோரிக்கைகள் பற்றியும் இனறு விவாதிக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.

முக்கியமாக, விவசாயிகள் பிரச்னை, நீட் தேர்வு விவகாரம் உள்ளிட்டவைகுறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறும் மூன்றாவது அமைச்சரவைக் கூட்டமாகும்.