வெளியிடப்பட்ட நேரம்: 20:42 (02/05/2017)

கடைசி தொடர்பு:20:02 (02/05/2017)

சென்னை ஐஐடி வளாகத்தில் பெண் சடலம்!?

சென்னை ஐஐடி வளாகத்தில் 40 வயது மதிக்கத்தக்க பெண் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. ஐஐடி, சென்னை வளாகத்தில் உள்ள பிரம்மபுத்ரா விடுதி வளாகத்தின் பின்புறம் பெண் சடலம் கண்டெடுப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஐஐடி வளாகத்தில் பெண் சடலமாக கண்டெடுக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், பெண் சடலத்தைக் கைப்பற்றி, போலீஸ் விசாரணை நடத்தி வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.