தஞ்சை மாவட்டத்தில் மழை வேண்டி பெண்கள் ஒப்பாரி!

தமிழகத்தில், கடந்த 142 ஆண்டுகளாக இல்லாத வறட்சி நிலவிவருகிறது. இதனால், மாநிலத்தில் இருக்கும் ஆறு, குளம், ஏரி, கண்மாய் என அனைத்து நீர்நிலைகளும் வறண்டுவிட்டன. நெற்களஞ்சியமான தஞ்சையில், மூன்று போகம் விளைவிப்பது மாறி, ஒரு போக விவசாயம் செய்வதே சவாலாகிவிட்டது. தஞ்சையில், காவேரிமூலம் விவசாயம் செய்த நிலை கடந்து, முழுக்க முழுக்க ஆழ்துளைக் கிணறுகள்மூலம் விவசாயம் செய்யும் நிலை வந்துள்ளது.  

 தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு வட்டம், வடசேரி கிராமத்தில்... வருண பகவான் உருவத்தை மண்ணில் வடித்து, மழை வேண்டி ஒப்பாரி வைத்தனர் பெண்கள். பின்னர், கருவாட்டுக் குழம்பு படையல்போட்டு, நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவருக்கும் பகிர்ந்து கொடுத்தனர்.

கிட்டத்தட்ட 10 நாள்களாக நடந்த இந்த ஒப்பாரி நிகழ்ச்சி, நேற்று முன்தினம் இரவுடன் முடிவுக்கு வந்தது. இந்த நிலையில், நேற்று ஒரத்தநாடு வட்டத்தில் மழை பெய்துள்ளது. ஆனால், வடசேரி பகுதியில் மழை பொழியவில்லையாம்.  

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!