நீட் தேர்வு தமிழகத்தில் ஏன் வெறுக்கப்படுகிறது? நீதிபதி கிருபாகரன் கேள்வி!

நீட் தேர்வு, தமிழகத்தில் ஏன் வெறுக்கப்படுகிறது? என, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் கேள்வி எழுப்பியுள்ளார். 

neet
 

'இந்த ஆண்டு முதல் 'நீட்' தகுதித் தேர்வு மூலமாகவே மருத்துவப் படிப்புக்கான நுழைவுத்தேர்வு நடக்கும்' என்று மத்திய அரசு உறுதியாகத் தெரிவித்துள்ளது. நீட் தேர்வு நடைபெற உள்ள மையங்கள் உள்ளிட்ட தகவல்களை வெளியிட்டுள்ளது மத்திய அரசு. 'நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும்' என்ற கோரிக்கை, தமிழக அரசு சார்பாக மத்திய அரசுக்கு வைக்கப்பட்டது. மாநிலம் முழுவதும் நீட் தேர்வுக்கு எதிராகக் குரல்கள் எழுந்தன. ஆனால், மத்திய அரசு தமிழகத்தின் கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டது.

இந்த நிலையில், நீட் தேர்வு மதிப்பெண்களுடன் பிளஸ்2 மதிப்பெண்களையும் சேர்த்துக் கணக்கிடக் கோரி, கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு, இன்று நீதிபதி கிருபாகரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த கிருபாகரன், நீட் தேர்வு தமிழகத்தில் ஏன் வெறுக்கப்படுகிறது? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், 'நீட் தேர்வை எதிர்கொள்ளத் தகுதியான மாணவர்களை உருவாக்காததுதான் தேர்வை எதிர்க்கக் காரணமா? என வினா எழுப்பிய நீதிபதி, தகுதியில்லாத ஆசிரியர்களை உருவாக்கும் ஆசிரியர் கல்வி நிறுவனங்கள் பெருகிவருகின்றன என்றும், தகுதியில்லாத ஆசிரியர்கள் பெருகி வருவதால், தகுதியான மாணவர்கள் உருவாவதில்லை' என்றும் தெரிவித்துள்ளார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!