Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வீட்டுக்கே வருகிறது ஆவின்! தமிழக அரசின் புதுச் சேவை அறிமுகம்

கோயம்பேடு தெற்காசிய விளையாட்டு கிராமத்தில், 'இல்லம் தேடிவரும் ஆவின்' என்ற சேவையின்மூலம் பால்  உபபொருள்களின்  விற்பனையைத் தமிழக அமைச்சர் இன்று அறிமுகப்படுத்தினார். 'இந்தச் சேவை, சென்னையில் அமைந்துள்ள 14 நவீன பாலகங்களில் விரைவில் தொடங்கப்படும்' என்று தெரிவித்துள்ளார்.

கோயம்பேடு தெற்காசிய விளையாட்டு கிராமத்தில், 'இல்லம் தேடிவரும் ஆவின்' என்ற சேவையின்மூலம் பால் உபபொருள்களின் விற்பனையைப் பால் மற்றும் பால்பண்ணை மேம்பாட்டுத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி இன்று அறிமுகப்படுத்திப் பேசுகையில், 'பால் மற்றும் பால்பண்ணை மேம்பாட்டுத்துறை மற்றும் ஆவின் நிறுவனம், சிறப்பான முறையில் பால் கொள்முதல் செய்வதுடன், அவற்றின் விற்பனையையும் மேற்கொண்டுவருகிறது. மேலும், கிராமப்புற பால் உற்பத்தியாளர்கள் பயன்பெறும் வகையில், பால் உபபொருள்களின் விற்பனையை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

ஆவின் நுகர்வோர் சேவையில், மேலும் ஒரு மணிமகுடமாக, போன்செய்தால் பால்பொருள்களை இலவசமாக நுகர்வோர்களுக்கு டோர் டெலிவரி (Door Delivery) செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  அதன் முதற்கட்டமாக, இன்று, தெற்காசிய விளையாட்டு குடியிருப்பு வளாகத்தில் இந்த "இல்லம் தேடி வரும் ஆவின்" சேவை தொடங்கப்பட்டுள்ளது. சென்னையில் அமைந்துள்ள 14 நவீன பாலகங்களில் (Hi-Tech Parlours) இந்தச் சேவை விரைவில் தொடங்கப்படும்.

சென்னையில், இணையத்தின் சார்பில் தினசரி 11.7 லட்சம் லிட்டர் பால் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அவற்றில் மொத்த விற்பனையாளர்கள் மூலம் விற்பனை நான்கு லட்சம் லிட்டர் பாலும்,  கார்டுதாரர்கள்  மூலம் 7.1 லட்சம் லிட்டர் பாலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  இதர நிறுவனங்கள் மற்றும் ரொக்க பால் விற்பனை வாயிலாக 60 ஆயிரம் லிட்டர் பால் விற்பனை செய்யப்படுகிறது. மேலும், ஆவின் பாலகம், ஹைடெக் பாலகம், சில்லறைப் பால் விற்பனையாளர்கள் மற்றும் மொத்தப் பால் விற்பனையாளர்கள் மூலம் பால் உபபொருள்களான வெண்ணெய், நெய், பால்கோவா, மில்க் பேடா, தயிர், மோர், நறுமணப்பால், ஐஸ்கிரீம் வகைகள், லஸ்ஸி, சுடுபால், பால்பவுடர் ஆகியவை மாதந்தோறும் ரூபாய் 18 கோடி அளவுக்கு விற்பனை செய்யப்படுகின்றன.  இதனை மேலும் அதிகரித்து, மாதந்தோறும் ரூபாய் 20 கோடி அளவில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

சென்னையிலிருந்து இதர மாவட்டங்களுக்கு ஐஸ்கிரீம் அனுப்பப்பட்டு, மாதந்தோறும் சுமார் ரூபாய் 1.25 கோடி அளவுக்கு ஐஸ்கிரீம் விற்பனை செய்யப்படுகிறது.  இதை மேலும் அதிகரித்து ரூபாய் 3 கோடி என்ற அளவினை எட்ட தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மதுரை மாவட்டக் கூட்டுறவுப் பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில், ரூபாய் 45 கோடி செலவில் ஐஸ்கிரீம் தயார் செய்யும்  தொழிற்சாலை ஒன்று அமைக்க, கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது.

திருவண்ணாமலையில் அமைந்துள்ள பால்பவுடர் தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் பால்பவுடரானது வெளி மாநிலங்களில் சிறப்பான வரவேற்பினைப் பெற்றுள்ளது.  அரைக் கிலோ  மற்றும்  ஒரு கிலோ அளவிலான பால்பவுடர் தமிழ்நாட்டில்  மட்டும்  சராசரியாக மாதம் ஒன்றுக்கு 3 ஆயிரத்து 500 கிலோ விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  பால்பவுடர் சில்லறை விற்பனையை  மேலும் அதிகரித்து, அதன் மூலம் கிடைக்கப்பெறும்  கூடுதல் வருமானத்தினை  கிராமப்புற பால் உற்பத்தியாளர்கள்  பெறும் வகையில், 19.04.2017 முதல் அரைக் கிலோ மற்றும் ஒரு கிலோ அளவிலான பால்பவுடரின் விற்பனை வெளி மாநிலங்களில் தொடங்கப்பட்டுள்ளது. பால் மற்றும் பால் உபபொருள்கள் விற்பனையை அதிகரிக்க பால்வளத் துறையால் மேலும் சில சிறந்த திட்டங்களை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" என்று கூறினார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement