Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

‘எடப்பாடி பழனிசாமி அரசு வீழ்ந்தால்...!?’ - அமித் ஷாவின் ‘கொங்கு மண்டல கணக்கு’ #VikatanExclusive

அமித் ஷா-மோடி

த்தியில் ஆட்சிக்கு வந்த பிறகு இரண்டு முறை தமிழகத்துக்கு வருகை புரிந்த பா.ஜ.க தேசியத் தலைவர் அமித் ஷா, வரும் 10-ம் தேதி காலை மூன்று நாள் பயணமாக வர இருக்கிறார். ‘தமிழகத்தில் கட்சியை பலப்படுத்துவதும் வரக் கூடிய தேர்தலில் கூட்டணி தொடர்பான விஷயங்களை அலசுவதற்கும் இந்தப் பயணத்தை அவர் பயன்படுத்திக் கொள்ள இருக்கிறார்' என்கின்றனர் பா.ஜ.க தலைவர்கள். 

தமிழக அரசியலில் ஜெயலலிதா மரணத்தைத் தொடர்ந்து, 'மாநில அரசியலில் மத்திய அரசு ஆதிக்கம் செலுத்துகிறது' என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகிறது. இரட்டை இலைச் சின்னம் முடக்கம்; சசிகலா-தினகரன் கைது; எடப்பாடி பழனிசாமி-பன்னீர்செல்வம் மோதல் என நிலைமை இன்னும் கட்டுக்குள் அடங்கவில்லை. அ.தி.மு.கவும் மூன்று துண்டுகளாக சிதறிவிட்டது. ஒட்டுமொத்த விவகாரத்திலும் பா.ஜ.க தலைமையை நோக்கியே அ.தி.மு.க நிர்வாகிகள் கை காட்டுகின்றனர். ஆனால், விமர்சனங்களைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் பா.ஜ.க தலைவர்கள் பேசி வருகின்றனர். 

தமிழக பா.ஜ.கவின் மாநில பொதுச் செயலாளர் வானதி சீனிவாசனிடம் பேசினோம். "அமித் ஷாவின் மூன்று நாள் பயணம் மிக முக்கியமானது. உத்தரப்பிரதேச தேர்தல் வெற்றிக்குப் பிறகு அவர் தமிழகம் வருகிறார். ஒடிஸா, மேற்கு வங்காளம், கேரளா, தமிழ்நாடு ஆகிய நான்கு மாநிலங்களில் கட்சியை பலப்படுத்த பல்வேறு செயல் திட்டங்களை வகுத்திருக்கிறார். 10-ம் தேதி சென்னையில் மாநில, மாவட்ட நிர்வாகிகளை சந்தித்துப் பேசிவிட்டு, பூத் கமிட்டி ஒன்றை பார்வையிட இருக்கிறார். மறுநாள் கோவையில் இரண்டு நாள்கள் தங்க இருக்கிறார். இந்த சந்திப்பில் கட்சியில் உள்ள தீனதயாள் உபாத்தியாயா கமிட்டி, சுவச் மிட்டி, அவாமி கங்கை கமிட்டி ஆகியவற்றின் நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்துகிறார். அதன்பிறகு தொழிலதிபர்கள் தொடங்கி துப்புரவு பணியாளர்கள் வரையில் அனைத்து தரப்பினர் முன்னிலையிலும் பேச இருக்கிறார். கட்சியின் செயல்பாடுகள் குறித்தும் ஆய்வு நடத்த இருக்கிறார். நாடு முழுவதும் பா.ஜ.கவை பலப்படுத்த 95 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார் அமித் ஷா. அதன் ஒருபகுதியாகத்தான் தமிழகம் வருகிறார்" என்றார்.

வானதி சீனிவாசன்“கொங்கு மண்டலத்தைப் பொறுத்தவரையில், 98-ம் ஆண்டில் இருந்து பா.ஜ.கவுக்குக் கணிசமான வாக்கு வங்கியை அளிக்கும் பகுதியாக இருந்து வருகிறது. சட்டமன்றத் தேர்தலில் கோவை மாவட்டத்தில் பத்து சதவீத வாக்குகளை பா.ஜ.க பெற்றது. தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளைவிடவும் கொங்கு மண்டலத்தில் கட்சியின் வளர்ச்சி சிறப்பாக இருந்து வருகிறது. எனவேதான், திருப்பூர் பொது சுத்திகரிப்பு திட்டத்துக்கு நிதி ஒதுக்கியது; ஜவுளி பிரச்னைக்குத் தீர்வு அளித்தது; சிறப்பு ரயில் ஒதுக்கியது என பல்வேறு திட்டங்களை மத்திய அரசு அறிவித்து வருகிறது. மாநிலத்தின் வளர்ச்சிக்காக மத்திய அமைச்சர்களும் தொடர்ந்து வருகை தருகின்றனர். ஆர்.எஸ்.எஸ் தொடங்கிய காலத்தில் இருந்து தமிழ்நாட்டில் தேசிய அளவிலான மாநாடுகளை நடத்தியதில்லை. ஆனால், கடந்த மாதம் முதன்முறையாக அகில இந்திய மாநாட்டைத் தொடங்கி வைத்தார் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத். தமிழகத்தில் ஐந்தாயிரம் கிராமங்களில் ஆர்.எஸ்.எஸ் கால்பதித்துவிட்டது. மீதமுள்ள ஏழாயிரம் கிராமங்களை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறோம்" என விவரித்த பா.ஜ.க நிர்வாகி ஒருவர், 

தமிழக அரசியலில் கருணாநிதி, ஜெயலலிதா இல்லாத சூழலை பா.ஜ.கவுக்கு சாதகமானதாகப் பார்க்கிறோம். திராவிடக் கட்சிகளால் பாதிக்கப்பட்ட மொழிவழி மக்களை ஒன்றுதிரட்டி, அவர்களுக்கான முக்கியத்துவத்தை வழங்கும் முடிவில் இருக்கிறார் அமித் ஷா. உ.பியில் முலாயம் சிங் யாதவின் சமுதாயத்தை குறிவைத்து, பிற சமூகங்களை வளைத்தது போல தமிழ்நாட்டுக்கும் சில வியூகங்களை வகுத்திருக்கிறார். அதன் முன்னோட்டமாக கட்சிக்கு செல்வாக்கு உள்ள பகுதிகளில் சமுதாயத் தலைவர்களை சந்திக்க வருகிறார். தவிர, தமிழக செயல்பாடுகள் குறித்து அண்மையில் சர்வே ஒன்றை எடுத்தார் அமித் ஷா. அதில், 'தமிழக அரசு பலமாக இருப்பதற்குக் காரணம் கொங்கு மண்டலம்தான். இங்குள்ள பெரும்பாலான தொகுதிகளில் வெற்றி பெற்றதால்தான் ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வந்தார். இந்தப் பகுதிகளில் பா.ஜ.கவும் பலத்துடன் இருக்கிறது. தற்போது அ.தி.மு.க பல துண்டுகளாக சிதறியுள்ளது. இதன் தாக்கம் தேர்தலில் எதிரொலிக்கும். அவர்கள் பலவீனமடைந்தால், பா.ஜ.க பலம்பெறும்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவேதான், கொங்கு மண்டலத்துக்குக் கூடுதல் முக்கியத்துவம் தருகிறார் தேசியத் தலைவர் அமித் ஷா" என்றார் விரிவாக. 

கோவை குண்டுவெடிப்பு கலவரத்துக்குப் பிறகு பா.ஜ.க வேட்பாளராக போட்டியிட்ட சி.பி.ராதாகிருஷ்ணன் எம்.பியாக தேர்வு செய்யப்பட்டார். அடுத்து வந்த தேர்தலிலும் அவரே வெற்றி பெற்றார். அன்றில் இருந்து 'இந்து வாக்கு வங்கி' என்ற அடிப்படையில் ஆர்.எஸ்.எஸ்ஸும் பா.ஜ.கவும் செயல்பாடுகளை தீவிரப்படுத்தி வருகின்றன. 'அமித் ஷாவின் கொங்கு மண்டல வருகை அரசியல்ரீதியாக என்ன மாதிரியான மாற்றங்களை ஏற்படுத்தும்?' என உன்னிப்பாக கவனித்து வருகின்றனர் அரசியல் விமர்சகர்கள்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close