Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சசிகலாவின் கோரிக்கையை ஏற்றது நீதிமன்றம்! ஆனால், இவர்களது அனுமதி தேவை!

அந்நிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலாவின் கோரிக்கை சென்னை எழும்பூர் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.

ஜெ.ஜெ.டி.வி.க்கு ஒளிபரப்பு கருவிகள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ததில் அந்நிய செலாவணி மோசடி நடந்துள்ளதாக கூறி சசிகலா, அவரது உறவினர் பாஸ்கரன் ஆகியோர் மீது அமலாக்கப்பிரிவினர் தொடர்ந்த வழக்கு விசாரணை சென்னை எழும்பூர் 1-வது பொருளாதார குற்றப்பிரிவு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இந்நிலையில், சசிகலா சிறையில் இருப்பதால் அவரால் நேரில் ஆஜராக இயலாது என்றும், அவரிடம் காணொலி காட்சி மூலம் விசாரணை நடத்த வேண்டும் என்றும் சசிகலா தரப்பில் வழக்கறிஞர் பி.குமார், எழும்பூர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். அந்த மனுவில், "சசிகலா முதுகுவலியால் அவதிப்படுகிறார். அவரால் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக இயலாது. நவீன தொழில்நுட்பங்களை நீதிமன்றங்கள் பயன்படுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் உத்தரவிட்டுள்ளது. இந்த நீதிமன்றத்தில் காணொலி காட்சி மூலம் விசாரணை நடத்த அனைத்து வசதிகளும் உள்ளது. எனவே, சசிகலா மீதான வழக்கை காணொலி காட்சி மூலம் விசாரிக்க உத்தரவிட வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இதற்கு அமலாக்கப்பிரிவு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தண்டபாணி கடும் எதிர்ப்பு தெரிவித்து வாதிடுகையில், "இந்த வழக்கை பொறுத்தமட்டில் சசிகலா, பாஸ்கரன் ஆகியோர் மீது குற்றச்சாட்டை பதிவு செய்ய வேண்டியது உள்ளது. ஒருவர் மீது குற்றச்சாட்டை பதிவு செய்ய குற்றம்சாட்டப்பட்ட நபர் நேரில் ஆஜராக வேண்டும். சசிகலா முதுகுவலியால் அவதிப்படுவதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ள போதிலும் அதுதொடர்பான மருத்துவ சான்றை தாக்கல் செய்யவில்லை. பெங்களூருவில் இருந்து சென்னைக்கு நான்கு மணி நேரத்தில் வந்து சேரலாம். எனவே, சசிகலா மீதான வழக்கை காணொலி காட்சி மூலம் விசாரிக்க வேண்டும் என்ற மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்’ என்று கூறினார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜாகீர் உசேன், மனு மீதான தீர்ப்பை மே 4-ம் தேதிக்கு (இன்று) ஒத்திவைத்தார். அதன்படி இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி, காணொலி காட்சி மூலம் ஆஜராக அனுமதி அளித்ததோடு, இரண்டு வாரத்தில் காணொலி காட்சி மூலம் விசாரணை நடத்தப்படும் என்று கூறினார்.

மேலும், கர்நாடக சிறைத்துறை, உள்துறையின் அனுமதியை சசிகலா பெற வேண்டும் என்றும், அனுமதி பெற்றதற்கான ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும், எந்த மொழியில் காணொலி பேசவுள்ளார் என்பதையும் தெரிவிக்க வேண்டும் என்றும் கூறிய நீதிபதி, வழக்கு விசாரணையை வரும் 18-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close