அழகர் ஆற்றில் இறங்கும் திருவிழா - அமைச்சர் செல்லூர் ராஜூ 'புதிய' தகவல் | TN ministers inspected in Madurai Meenachi temple and Vaigai river

வெளியிடப்பட்ட நேரம்: 19:15 (04/05/2017)

கடைசி தொடர்பு:20:03 (04/05/2017)

அழகர் ஆற்றில் இறங்கும் திருவிழா - அமைச்சர் செல்லூர் ராஜூ 'புதிய' தகவல்

மதுரை சித்திரைத் திருவிழா ஏற்பாடுகளை மேற்பார்வையிட்ட தமிழக அமைச்சர்கள், அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சிக்காக வைகை ஆற்றையும் பார்வையிட்டனர். இந்த நிகழ்வில் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், சேவூர் ராமச்சந்திரன் மற்றும் ராஜன் செல்லப்பா ஆகியோர் இருந்தனர். 
 

sellru raju

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வருகை தந்த அமைச்சர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் கோயில் அறங்காவலர் கரு.முத்துகண்ணன் அளித்த மரியாதையை ஏற்றுக் கொண்டனர். அதன்பிறகு அழகர் ஆற்றில் இறங்கும் பகுதிகளையும் அமைச்சர்கள் பார்வையிட்டனர். கூட்டுறவு அமைச்சர் செல்லூர் ராஜூவிடம், 'மதுரையில் தண்ணீர் பஞ்சம் உச்சத்தில் இருக்கும் இந்த சமயத்தில் ஆற்றில் அழகர் இறங்க என்ன வகையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று கேள்வி எழுப்பப்பட்டது. அமைச்சர் செல்லூர் ராஜு 'போன வருடம் எப்படி அழகர் இறங்கினாரோ அப்படிதான் இந்த வருடமும் இறங்குவார்' என்று காட்டமாக பதில் அளித்தார்.

sellur raju

தரிசனத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், 'சித்திரை திருவிழா அறிவித்த தேதிகளில் சிறப்பாக நடக்க அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மதுரை முழுவதும் தற்காலிக தண்ணீர் தொட்டிகள், மீனாட்சி அம்மன் கோவிலைச் சுற்றி ஐந்து நிரந்தர தண்ணீர் தொட்டிகள் மற்றும் மதுரையில் ஆங்காங்கே தற்காலிக பொதுக் கழிப்பிடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருவிழாவுக்காக  எட்டு கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வருட சித்திரைத் திருவிழாவில் கள்ளழகர் 430 மண்டகப்படிகளில் எழுந்தருள்வார். இது மட்டுமல்லாமல் மதுரை வைகையாற்றின் சிதிலமடைந்த மைய மண்டபம் 41 லட்ச செலவில் பழமை மாறாமல் புதுப்பிக்கப்படும்' என்றார்.