வெளியிடப்பட்ட நேரம்: 20:54 (04/05/2017)

கடைசி தொடர்பு:20:54 (04/05/2017)

சென்னையில் ‘உலக பத்திரிகை சுதந்திர தினம்’ நினைவுகூறல் விழா!

உலக பத்திரிகை சுதந்திர நாளினை முன்னிட்டு சென்னையின் அமெரிக்க தூதரகம் சார்பில் சிறப்புரை நிகழ்வுகளும், கலந்தாய்வு கூட்டங்களும் இரண்டு நாள் நிகழ்வாக நடத்தப்பட்டது.

பத்திரிகை சுதந்திர தினம்


மார்ச் 3-ம் தேதி உலக பத்திரிகை சுதந்திர நாளாக நினைவு கூறப்படுகிறது. இதனையொட்டி சென்னை அமெரிக்க தூதரகம் சார்பில் சிறப்பு கலந்தாய்வுக் கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


லயோலா கல்லூரியிலும், சென்னை அமெரிக்கத் தூதரகத்திலும் நடைபெற்ற நிகழ்ச்சிகளில், இந்தியா மற்றும் அமெரிக்க பத்திரிகையாளர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். முதல் நாள் அமெரிக்காவின் முன்னணி பத்திரிகையாளரும், மக்கள் தகவல் தொடர்பியல் பயிற்றுனருமான ஆலிசன் பெத்தெல் மெக்கென்ஸி, பத்திரிகையாளர்களின் தியாகங்கள் குறித்து சிறப்புரை வழங்கினார். 

பின்னர் நடந்த குழு விவாதத்தில் தமிழகத்தின் முக்கிய பத்திரிகைப் பொறுப்பாசிரியர்கள் கலந்துகொண்டு, இளம் பத்திரிகையாளர்கள் மற்றும் இதழியல் மாணவர்களுடன் கலந்துரையாடினர். இரண்டாவது நாள் நிகழ்ச்சியில் தேசிய முன்னணி பத்திரிகையாளர்கள் கலந்துகொண்ட குழு விவாதம் நடைபெற்றது. இவ்விவாதங்களில் வளர்ந்து வரும் தொழில்நுட்ப சமூகத்தில் இதழியலின் பங்கு குறித்து விவாதிக்கப்பட்டது.