மே 15 முதல் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்..! | Government Transport employees announces strike on 15th May

வெளியிடப்பட்ட நேரம்: 20:46 (04/05/2017)

கடைசி தொடர்பு:10:43 (05/05/2017)

மே 15 முதல் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்..!

மே 15-ம் தேதி முதல் போக்குவரத்துத் தொழிலாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ளனர்.

bus strike

13-வது ஊதிய ஒப்பந்தம்குறித்து போக்குவரத்துத்துறை அதிகாரிகளுடன், போக்குவரத்துத் தொழிற்சங்கத்தைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள், இன்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். நீண்ட நேரம் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால்,         மே 15-ம் தேதி முதல் அரசு போக்குவரத்துத் தொழிலாளர்கள் அனைவரும் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளனர். நிலுவைத்தொகை வழங்கப்படாதது முக்கியக் காரணமாகத் தெரிவிக்கப்பட்டது. போராட்டத்துக்கு அனைத்து போக்குவரத்துத் தொழிலாளர் சங்கத்தினரும் ஆதரவு தெரிவித்து, வேலைநிறுத்த அறிவிப்பை அறிவித்துள்ளனர். மே 9-ம் தேதி போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்த விளக்கக் கூட்டம் நடைபெற இருப்பதாக, தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. இந்தப் போராட்டத்தால், தமிழகம் முழுவதும் சுமார் 90 சதவிகித அரசுப் பேருந்துகள் இயங்காது எனக் கூறப்படுகிறது. அண்ணா தொழிற்சங்கம் இந்த போராட்டத்தில் ஈடுபடுமா என்பது பற்றி இன்னும் அறிவிப்பு வெளியாகவில்லை.