'சென்னைஸ் அமிர்தா' விளம்பர நடிகை விபத்தில் பலி! கார் டிரைவர் மாயம் | Chennais Amirtha fame actress Sindu Rekha dead in car accident, driver missing

வெளியிடப்பட்ட நேரம்: 11:32 (05/05/2017)

கடைசி தொடர்பு:17:41 (04/02/2019)

'சென்னைஸ் அமிர்தா' விளம்பர நடிகை விபத்தில் பலி! கார் டிரைவர் மாயம்

'சென்னைஸ் அமிர்தா' உள்ளிட்ட பல விளம்பரப் படங்களில் நடித்த நடிகை ரேகாசிந்து, வேலூர் மாவட்டம், நாட்ராம்பள்ளி அருகே நடந்த விபத்தில் பலியானார். காரை ஓட்டிவந்த டிரைவர்  மாயமானது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.

கர்நாடக மாநிலம், பெங்களூரைச் சேர்ந்தவர் பால்ராஜ். இவர் மகள் ரேகாசிந்து. துணை நடிகையான இவர், சென்னைஸ் அமிர்தா போன்ற பல விளம்பரங்களில் நடித்துள்ளார்.

ஒரு விளம்பரப் படத்தில் நடிப்பதற்காக, ரேகாசிந்து பெங்களூரிலிருந்து சென்னைக்கு காரில் வந்துகொண்டிருந்தார். இன்று அதிகாலை இரண்டு மணி அளவில், கார் வேலூர் மாவட்டம், நாட்ராம்பள்ளியை அடுத்த வெலக்கல்நத்தம் அருகே வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்து சாலைத் தடுப்பில் பயங்கரமாக மோதியது. இதில் பலத்த காயமடைந்த துணை நடிகை ரேகாசிந்து, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். டிரைவர் மாயமாகிவிட்டார்.

தகவல் அறிந்த காவல்துறையினர், சம்பவ இடத்துக்கு விரைந்துவந்து உடலைக் கைப்பற்றி, நாட்ராம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு, பிரேதப் பரிசோதனை வசதியில்லாததால், திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது. மாயமான கார் டிரைவரை காவல்துறையினர் தேடிவருகின்றனர்.