“அது வதந்தி... நான் நலம்!’’ ‘தெய்வமகள்’ அண்ணி

அண்ணி கேரக்டரில் நடிக்கும் ரேகா குமார்

ன் டி.வி யில் ஒளிபரப்பாகிவரும் 'தெய்வமகள்' தொடரில் அண்ணி கேரக்டரில் நடித்து வருபவர் ரேகா குமார். இவர் நடித்து வரும் காயத்ரி என்ற கதாபாத்திரத்துக்கு தமிழ்நாட்டில் ரசிகர்கள் ஏராளம். இன்று காலை, வேலூர் அருகேயுள்ள நாட்றாம்பள்ளியை அடுத்த வெலக்கல்நத்தம் என்ற இடத்தில் சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கார் தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளாகியிருக்கிறது.

இந்த விபத்தில் ' தெய்வமகள்' ரேகா குமார் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டதாகவும் செய்திகள் பரப்பிவருகின்றனர். இதனை அடுத்து ரேகா குமாரைத் தொடர்பு கொண்டு பேசினோம்,

''எனக்கு காலையில் இருந்து போன் கால் வந்துட்டே இருக்கு. நான் இப்போ கர்நாடகாவுல இருக்கேன். இன்னைக்கு எனக்குத் தெரிஞ்ச தம்பி ஒருத்தருக்குத் திருமணம். அதற்குக் கிளம்பிட்டு இருக்கேன். ஆனா என்னால கிளம்பக்கூடமுடியாத அளவுக்குத் தொடர்ந்து போன்கால் வந்துட்டே இருக்கு. கால் அட்டெண்ட் பண்ணாம போயிட்டா அந்தவிபத்தில் சிக்கிக்கொண்டது நாந்தான்னு மக்கள் நினைச்சுப்பாங்க. அதனால, ஒருத்தர் விடாம வர்ற போன் கால் அத்தனையையும் அட்டெண்ட் பண்ணிட்டு இருக்கேன். எனக்கு மட்டும் இப்படி போன் கால் வரல.

தெய்வமகள் சீரியல்ல என்கூட நடிக்கிற திலகாவுக்கும் போன் வந்துட்டே இருக்கு. காரணம் அவர் பெயர் சிந்து. அவரும் காலையில் எனக்குப் போன் பண்ணி எல்லாரும் என்னைக் கூப்பிட்டு விசாரிச்சிட்டு இருக்காங்கனு சொன்னாங்க. எனக்குத் தெரிஞ்ச வரைக்கும் ரேகா சிந்து என யாரோ ஒரு பெண் அந்த விபத்தில் சிக்கியிருக்காங்க போல.. அது நான்தான் என முடிவு பண்ணிட்டாங்க. நான் நலமா இருக்கேன். நான் எந்த விபத்திலும் சிக்கல. ஒரு நல்ல காரியத்துக்குப் போயிட்டு இருக்கும்போது இப்படி கால் வர்றது மனசுக்குக் கொஞ்சம் வருத்தமாதான் இருக்கு. இருந்தாலும் உங்க கிட்ட நான் நலமா இருக்கேன்னு தெரிவிக்க வேண்டியது என்னோட கடமை. நீங்க இப்படி என்கிட்ட போன் பண்ணி கேட்டு கன்ஃபார்ம் பண்ணிக்கிட்ட மாதிரி எல்லாரும் சம்பந்தப்பட்டவங்ககிட்ட விசாரிச்சு நியூஸ்போடுறது நல்லதுதான்' என்றார். 

ரேகா சிந்து


என்னதான் நடந்தது என விசாரித்தோம். வேலூர் அருகே நாட்றாம்பள்ளி அடுத்த வெலக்கல்நத்தம் என்கிற இடத்தில் சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கார் தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளாகியிருக்கிறது. அந்த காரில்பயணித்தவர் ரேகா சிந்து. அவர் சம்பவ இடத்திலேயே பலியாகியிருக்கிறார். இவர் சென்னை அமிர்தா விளம்பரத்தில் நடித்திருக்கிறார். துணை நடிகையான இவர் பலியானதைத்தான் தெய்வ மகள் தொடரில் அண்ணி கேரக்டரில் நடித்துவரும் ரேகா குமார் பலியானதாக நினைத்து வாட்ஸ்அப்பில் தகவல்கள் தவறாக பரவிவருகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!