Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வாட்ஸ்அப் மூலம் குற்றங்களைத் தடுக்க அழைக்கிறது தமிழக காவல்துறை!

வாட்ஸ் அப்

'காவல் துறை உங்கள் நண்பன்' இதுதான் காவல் துறையின் தாரக மந்திரம். ஆனால் ,எந்தக் காவலர்களாவது பொதுமக்களுடன் நண்பர்களாக இருக்கிறார்களா என்றால்? நிச்சயம் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அரசியல்வாதிகளின் கைப்பாவையாக இருந்துகொண்டு அப்பாவி மக்களிடம் தாக்குதல் நடத்துவதால் பொதுமக்களும் காவலர்களை நண்பர்களாக ஏற்றுக்கொள்ள முன்வருவதில்லை. தங்கள் துறையின் மீது விழும் கறைகளை எப்படியாவது அகற்றவேண்டும் என்ற எண்ணத்தில் காவலர்களும் திறம்படவே பணிகளைச் செய்கின்றனர். எவ்வளவுதான் டெக்னாலஜி வளர்ந்தாலும் குற்றங்கள் நடப்பதற்கு முன்பே காவலர்கள் தடுக்க முடியவில்லை. இதுபோல் இனி நடக்கக் கூடாது குற்றங்களில் ஈடுபட்டவர்களை உடனே கண்டறிய வேண்டும். குற்றங்கள் தடுக்கப்பட வேண்டும், பொது மக்களுடன் நல்லுறவைக் கடைப்பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் போலீஸ்காரர்களும், பொதுமக்களும் இணைந்து வாட்ஸ்அப் குரூப் உருவாக்கவேண்டும் என்று சென்னையின் கமிஷ்னர் கரன் சிங்கா அறிவித்துள்ளார். அதாவது ஒவ்வொரு இன்ஸ்பெக்டர் தலைமையிலும் ஒரு வாட்ஸ்அப் குரூப் உருவாக்கப்பட்டு அதில் அந்தச் சரகத்துக்கு உட்பட்ட  நல சங்க நிர்வாகிகள், பள்ளி-கல்லூரி முதல்வர்கள், சமூக சேவகர்கள், வழக்கறிஞர்கள், கடை உரிமையாளர்கள், பாதுகாப்புப் பிரிவில் உள்ளவர்கள் என அனைவரும் சேர்க்கப்பட்டு தகவல்கள் உடனுக்குடன் காவல் துறைக்கு அனுப்பி வைத்தால், காவல் துறை உடனடியாக சம்பவ இடத்துக்கு வரும் என்று அறிவித்துள்ளார். 

போலீஸ்

இது எந்த அளவுக்கு சாத்தியம் என்று தெரியவில்லை ஏனென்றால். ஒவ்வொரு திங்கள் கிழமையும் 'பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெறும் நாள்' என்று ஏற்கெனவே செயல்பட்டு வருகிறது. ஆனால் அங்கு சென்று மனுக்கொடுப்பவர்களுக்கு சரியான மரியாதை அளிப்பதில்லை, அல்லது புகார்களுக்கு முறையான தீர்வு கொடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. இதேபோல் 'அவசர காவல்துறை அழைப்புக்காக' என்று மொபைல் நம்பர் காவல்துறை தரப்பிலிருந்து தரப்பட்டது. ஆனால் அந்த நம்பருக்கு கால் செய்தால் பல நேரங்களில் ரிங் ஆகுமே தவிர யாரும் எடுப்பதில்லை. அதேபோல இந்தத் திட்டத்தையும் அலட்சிய போக்கால் பாதியிலேயே விட்டுவிடுவார்களா? என்பதும் தெரியவில்லை. இதில் இன்னொரு முக்கிய பிரச்னையும் இருக்கிறது. சமீபத்தில் தூத்துக்குடி பி.எஸ்.என்.எல் அலுவலகத்தில், நிர்வாக ரீதியான தகவல்களை பரிமாறிக்கொள்வதற்கு ஒரு வாட்ஸ்அப் குரூப் உருவாக்கப்பட்டது. அக்தர் முஹம்மது அதில் பெண் உயரதிகாரி ஒருவர் ஒரு தகவல் பரிமாறியிருக்கிறார். அதற்கு சக பணியாளர்கள் ஸ்மைலியை ரிப்ளே செய்திருக்கின்றனர். அதில் கோபமடைந்த அந்தப் பெண் அதிகாரி எனக்கு ஸ்மைலி அனுப்பி என்னை உதாசீனம் செய்துள்ளனர் என்று காவல் துறையில் புகார் கொடுத்திருந்தார். காவல்துறையின் இந்த வாட்ஸ்அப் குழு உருவாக்கம் மக்களுக்கு உண்மையிலேயே பயன்படும் விதத்தில் இருக்குமா? என்று அறப்போர் இயக்கத்தின் தலைவரான அக்தர் முஹம்மதுவிடம் கேட்டோம். 

"இது வரவேற்கத்தக்க விஷயம். சரியான முறையில் தகவல்கள் கிடைக்காததால் தான் காவல் துறையினரால் சம்பவ இடத்துக்குப்  போய் சேர முடிவதில்லை. தற்போது சமூக வலைத்தளம் மூலமாகத்தான் பல செய்திகள் வெளிச்சத்துக்கு வருகின்றன. இதுபோன்ற வாட்ஸ்அப் குழுக்கள் உருவாக்கப்பட்டு அதன் மூலமாக காவலர்களும் பொதுமக்களும் இணைந்து செயலாற்றினால் குற்றங்கள் நடப்பது உடனுக்குடன் வெளிச்சத்துக்கு வருவதோடு மட்டுமல்லாமல் பாதியாகக் குறையும். மனு கொடுக்கும் நாளில் காவலர்கள் மற்றும் அதிகாரிகள் வேறுமாதிரியான அணுகுமுறைகளைச் சந்தித்திருப்பார்கள். அது வெளியில் தெரிவதற்கு வாய்ப்பில்லை. ஆனால் இந்தக் குழுவில் சமூக ஆர்வலர்கள், வழக்கறிஞர்கள், கடை உரிமையாளர்கள், அந்த ஏரியாவில் இருக்கும் முக்கியமான நபர்கள் இருப்பதால், அந்த குரூப்பில் புகார் அல்லது தகவல் தெரிவிக்கும் எந்த நபரையும் காவலர்களால் திட்டவோ அல்லது வேறு மாதிரியான அணுகுமுறையையோ கையாள முடியாது. அதுபோல கொடுக்கப்படும் தகவல்கள் உண்மை எனும் பட்சத்தில் ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று பலர் முன்னிலையில் காவலர்களை கேள்வி கேட்கலாம். அதற்கு கண்டிப்பாக காவலர்கள் பதில் சொல்லியே ஆக வேண்டும். அதுபோலவே வாட்ஸ்அப் குரூப்களில் ஏற்படும் தேவையில்லாத பிரச்னைகளைத் தவிர்க்க உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களை மட்டும் தான் ஷேர் செய்யவேண்டும். தனிப்பட்ட பிரச்னையை பெரியதாகச் சொல்லக்கூடாது. பொதுப் பிரச்னைகள் மட்டுமே பேசவேண்டும். தகவல் கொடுப்பவரைப் பற்றிய விவரங்கள் போன்றவை எக்காரணம் கொண்டும் வெளியே சொல்லக்கூடாது என்று முதலிலேயே வரையறை செய்யவேண்டும். அப்படிச் செய்தால் தான் தேவையற்ற தகவல்கள் மற்றும் பிரச்னைகள் தவிர்க்கப்படும். இந்த முயற்சியில் காவல் துறை, பொதுமக்களுடன் இணைந்து நல்லமுறையில் செயல்படுத்தினால், பொதுமக்களும் காவலர்களை நண்பர்களாக ஏற்றுக்கொள்வார்கள்." என்றார். 

காவலர்கள் பொதுமக்களுடன் நட்புடன் பழகி, குற்றங்களைத் தடுப்பதற்கு இந்த வாட்ஸ் அப் குரூப் திட்டம் பயன்பட்டால், உண்மையில் இது நல்ல திட்டமே!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close