'3 வருடங்களில் மணல் அள்ளுவது நிறுத்தப்படும்' - முதல்வர் பழனிசாமி பேச்சு

தமிழகத்தில் மணல் அள்ளுவது இன்னும் மூன்றே ஆண்டுகளில் நிறுத்தப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி மதுரையில் பேசியுள்ளார்.

edappadi palanisamy

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள மதுரை சென்றுள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இன்று மாலை நடந்த கூட்டத்தில் மக்கள் முன் பேசிய அவர், 'இன்னும் மூன்று ஆண்டுகளில் ஆற்றுப் படுகைகளில் மணல் அள்ளுவது முற்றிலும் நிறுத்தப்படும். ஆற்று மணலுக்கு பதிலாக கற்களை பொடியாக்கி தயாரிக்கப்படும் எம் சாண்டை பயன்படுத்த மக்களுக்கு அறிவுறுத்தப்படும். மணல் குவாரிகள் முழுவதையும் இனி அரசே ஏற்று நடத்தும். குவாரிகளில் மணலை அள்ளுவது, சேமித்து வைப்பது உட்பட வேலைகளின் மேற்பார்வையை அரசே கவனிக்கும். மணல் அள்ளுவதால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக பாதிக்கப்படுகிறது. மேலும், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும்', என்றார்.

edappadi palanisamy

முன்னதாக, மதுரை பாண்டி கோயில் அருகே நடந்த இளைஞர் திருவிழாவில் இளைஞர்களுடன் அமர்ந்து உணவருந்தினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

படம்: வீ.சதீஷ்குமார்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!