மருத்துவர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் வாபஸ் | Doctors to call off their strike over Medical Reservation

வெளியிடப்பட்ட நேரம்: 20:13 (05/05/2017)

கடைசி தொடர்பு:20:31 (05/05/2017)

மருத்துவர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் வாபஸ்

மருத்துவ இடஒதுக்கீடு கோரி நடைபெற்று வந்த வேலைநிறுத்தப் போராட்டத்தை வாபஸ் பெற்றுக்கொள்வதாக மருத்துவ சங்கத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவர்கள்

மருத்துவ பட்டமேற்படிப்பில் அரசு மருத்துவர்களுக்கான 50 சதவிகித இடஒதுக்கீட்டை நீதிமன்றம் ரத்து செய்ததைத் தொடர்ந்து, மீண்டும் இடஒதுக்கீடு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கக்கோரி அரசு மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இது குறித்து இன்று உயர்நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில், மருத்துவர்களுடன் மீண்டும் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும், பேச்சுவார்த்தையில் முடிவு ஏற்படாவிட்டால் எஸ்மா சட்டம் பயன்படுத்தலாம் என்று அறிவுறுத்தப்பட்டது.

மருத்துவ சங்கத்தின் பிரதிநிதிகளின் சார்பில் சுகாதாரத் துறை அமைச்சருடன் இன்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதையடுத்து மருத்துவர்களின் போராட்டம் வாபஸ் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அனைத்து மருத்துவர்களும் நாளை முதல் பணிக்கு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.