பண மோசடி வழக்கில் சிக்கிய தமிழக அமைச்சர் மீது வழக்குப் பதிவு!

தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ்  மீது மன்னார்குடி காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து, தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் பிரமாணப்பத்திரமாகத் தாக்கல்செய்துள்ளது.

Kamaraj


திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் அருகே உள்ள கீழவாழாச்சேரியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர், குமார். இவர், அமைச்சர் காமராஜர் மீது உச்சநீதிமன்றத்தில் பண மோசடி வழக்குத் தொடர்ந்தார்.

சென்னையில், குமாருக்குச் சொந்தமான வீட்டில் வாடகைக்குக் குடியிருந்தவர்களைக் காலிசெய்யவைப்பதற்காக, அமைச்சர் காமராஜுக்கு 30 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார் குமார். சட்டமன்றத் தேர்தலுக்கு முன், இரண்டு தவணைகளாகப் பணத்தை கொடுத்தாராம். பணத்தை வாங்கிக்கொண்ட காமராஜ், குமார் வீட்டில் குடியிருந்தவர்களைக் காலிசெய்யவைக்கவில்லை. குமார், தன் பணத்தைத் திருப்பிக்கேட்டபோது,  தர மறுத்துள்ளார் காமராஜ். எனவே குமார், உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கு, ஏப்ரல் 28-ம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அமைச்சர் காமராஜ் மீது எஃப்ஐஆர் பதிவுசெய்ய, காவல்துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து, காமராஜ் மீது மன்னார்குடி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!