வெளியிடப்பட்ட நேரம்: 14:40 (06/05/2017)

கடைசி தொடர்பு:15:10 (06/05/2017)

தமிழகத்தில் 21 புதிய எண்ணெய்க் கிணறுகள்: ஓ.என்.ஜி.சி திட்டம்!

ongc

தமிழகத்தில் 21 புதிய எண்ணெய்க் கிணறுகள் தோண்ட ஓ.என்.ஜி.சி நிறுவனம் திட்டமிட்டுள்ளது. தஞ்சை, நாகை, திருவாரூர், அரியலூர், கடலூர் ஆகிய மாவட்டங்களில், 21 புதிய கிணறுகளைத் தோண்ட ஓ.என்.ஜி.சி முடிவுசெய்துள்ளது. கிணறுகளைத் தோண்டுவதற்கு ஓ.என்.ஜி.சி நிறுவனத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

டெல்டா மாவட்டங்களில் மீத்தேன் எடுக்கும் திட்டம், நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டம் என, தமிழக மக்களை எப்போதும் போராட்ட மோடில் வைத்திருக்கிறது மத்திய அரசு. இந்த நிலையில், ஓ.என்.ஜி.சி நிறுவனம் 21 புதிய எண்ணெய்க் கிணறுகளைத் தோண்ட இருப்பது, விவசாய மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. சில வருடங்களுக்கு முன், காவிரி டெல்டா பகுதிகளில் உள்ள எண்ணெய் வளங்கள்குறித்து ஓ.என்.ஜி.சி நிறுவனம் ஆய்வு நடத்திவந்தது குறிப்பிடத்தக்கது.