Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஒருபக்கம் மன்னிப்பு; மறுபக்கம் கிடுக்கிப்பிடி கேள்வி! டாஸ்மாக் வழக்கில் அதிரடி காட்டிய உயர்நீதிமன்றம்

டாஸ்மாக் கடைக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்களை கைது செய்த விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தில் புழல் சிறைத்துறை அதிகாரிகள் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டனர். மேலும், தேர்தல் வாக்குறுதிப்படி டாஸ்மாக் கடைகளை எப்போது மூடுவீர்கள். தமிழகத்தில் அடுத்ததாக மேலும் 500 டாஸ்மாக் கடைகள் எப்போது மூடப்படும் என்று அடுக்கடுக்கான வினா எழுப்பிய நீதிபதிகள், இது தொடர்பாக ஜூன் 12-ம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.

சென்னையை அடுத்த திருமுல்லைவாயிலில் உள்ள குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவர்கள் கடந்த மாதம் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, பிரசன்னா உட்பட 21 பேரை காவல்துறையினர் கைது செய்து புழல் சிறையில் அடைந்தனர். இதனிடையே, பிரசன்னாவின் தாயார் இறந்துவிட்டதாகவும், இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள அவருக்கு பரோல் வழங்கவேண்டும் என்று புழல் சிறைத்துறை கண்காணிப்பாளரிடம் மனு அளிக்கப்பட்டது. இந்த மனுவுக்கு சிறைத்துறை சார்பில் எந்த பதிலும் அளிக்கவில்லை.

இந்நிலையில், பிரசன்னா உள்பட 21 பேர் ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் என்.கிருபாகரன், வி.பார்த்திபன் ஆகியோர், பிரசன்னாவுக்கு மட்டும் ஜாமீன் வழங்கியதோடு, மாலைக்குள் அவரை விடுவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தனர்.

இந்த வழக்கு நேற்று மீண்டும் நீதிபதிகள் என்.கிருபாகரன், வி.பார்த்திபன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது, பிரசன்னாவை ஜாமீனில் வெளியிட சிறைத்துறை நிர்வாகம் மறுத்துவிட்டதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், புழல் சிறை கண்காணிப்பாளர் ஆஜராக உத்தரவிட்டனர். அவர்கள் ஆஜராகாததால் கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், நீதிமன்றத்துக்கு வராத சிறைத்துறையினர் ஜனாதிபதியா; அமெரிக்க அதிபரா என்று கேள்வி எழுப்பினர். மேலும், 21 பேர் மீதான எப்.ஐ.ஆரை ரத்து செய்து உத்தரவிட்டனர்.

இதனிடையே, இந்த வழக்கு மீண்டும் இன்று நீதிபதிகள் என்.கிருபாகரன், வி.பார்த்திபன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, புழல் சிறைத்துறை அதிகாரிகள் முருகேசன், கிருஷ்ணராஜ் ஆகியோர் ஆஜராகினர். இதையடுத்து, தமிழக அரசு வழக்கறிஞர், நீதிமன்ற உத்தரவுப்படி 21 பேர் மீதான எப்ஐஆர் நேற்று ரத்து செய்யப்பட்டுவிட்டதாகவும், 20 பேர் மட்டும் நேற்று விடுவிக்கப்பட்டதாகவும் தெரிவித்தனர்.

அப்போது, நீதிபதிகள், அரசு சொல்லியும் சிறைத்துறை ஜாமீனில் விடாதா என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், சிறைத்துறை அதிகாரிகள் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கவேண்டும் என்று கூறினர். "உத்தரவு கிடைக்காததால் ஜாமீனில் விட அதிகாரிகள் தயங்கினர்" என்று தமிழக அரசு வழக்கறிஞர் தெரிவித்தார். இதையடுத்து, சிறைத்துறை அதிகாரிகள் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டனர்.

இதைத் தொடர்ந்து நீதிபதிகள், குஜராத், பீகாரைப் போல் தமிழகத்திலும் ஏன் முழுமதுவிலக்கு கொண்டு வரக்கூடாது என தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியதோடு, எதிர்கால தலைமுறையின் நலன் கருதி மதுவிலக்கு கொண்டுவந்தால் நன்றாக இருக்கும் என்றனர்.

மேலும், தேர்தல் வாக்குறுதிப்படி டாஸ்மாக் கடைகளை எப்போது மூடுவீர்கள் என்றும், தமிழகத்தில் அடுத்ததாக மேலும் 500 டாஸ்மாக் கடைகள் எப்போது மூடப்படும் என்றும் வினா எழுப்பிய நீதிபதிகள், இது தொடர்பாகவும், சிறைத்துறை தொலைத்தொடர்பை மேம்படுத்துவது குறித்தும் ஜூன் 12-ம் தேதிக்குள் தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close