Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

”எனக்கு ஏன் வெடிகுண்டு மிரட்டல்?” - இத்தாலியில் இருந்து குஷ்பு

 

‘தர்மத்தின் தலைவன்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் குஷ்பு. வழக்கமாக, திருமணத்துக்குப் பிறகு கணவர், குழந்தைகள் என தங்கள் வாழ்க்கையைச் சுருக்கிக்கொள்வது நடிகைகளின் வழக்கம். அந்த எண்ணத்தைத் தகர்த்தவர் குஷ்பு. இயக்குநர் சுந்தர்.சி-யைத் திருமணம் செய்து இரண்டு பெண் குழந்தைகள் பிறந்த பிறகு திரையில் நடிப்பதை நிறுத்திக்கொண்ட குஷ்பு, சினிமா தயாரிப்பாளர் அவதாரம் எடுத்தார்; பிரபல டிவி ஷோக்களில் பிரதான இடத்தைப் பிடித்தார். பிறகு, அரசியலிலும் அடியெடுத்துவைத்தார். முதலில் தி.மு.க-வில் சேர்ந்த அவர், தற்போது காங்கிரஸ் கட்சியில் அகில இந்திய செய்தித் தொடர்பாளராக இருக்கிறார்.

தனிப்பட்ட முறையில் குஷ்பு தைரியசாலி. சினிமாவில் மிகவும் துணிச்சலானவர் குஷ்பு. ரசிகர்கள் தனக்கு கோயில் கட்டியபோதும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தன் மீது வழக்கு போட்டு கோர்ட்டுக்கு அழைத்தபோதும்,  இரண்டையும் ஒரே மனநிலையில் எதிர்கொண்டவர் குஷ்பு. தமிழ்நாட்டுக்கு குஷ்பு வந்து, 30 ஆண்டுகளுக்குமேல் ஆகிறது. இப்போது திடீரென அவரது வீட்டுக்கு நள்ளிரவில் வெடிகுண்டு மிரட்டல் வந்திருக்கிறது. சென்னை பட்டினப்பாக்கம் காவல்நிலைய போலீஸார், குஷ்பு வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்விடுத்த நபர் குறித்து தற்போது விசாரணை நடந்துவருகின்றனர்.

 

மிரட்டல்

ஒவ்வொரு கோடை விடுமுறையிலும் தனது குழந்தைகளுடன் வெளிநாடு செல்வது குஷ்புவின் வழக்கம். இந்த முறை இத்தாலி சென்றிருக்கிறார். இத்தாலியில் இருக்கும் குஷ்புவிடம், “உங்கள் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்திருப்பது யார்... அரசியல் எதிரியா அல்லது தனிப்பட்ட விரோதமா?” என்று கேட்டோம்.


‘‘என் வீட்டுக்கு ஏன் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தனர் என்பது எனக்குப் புரியவில்லை. இப்போதைக்கு இதுகுறித்து போலீஸ் விசாரணை செய்துகொண்டிருக்கிறது. இம்மாதம் 14-ம் தேதி சென்னை வருகிறேன். போலீஸ் விசாரணைக்குப் பிறகு என்னுடைய பதிலைச் சொல்வேன்’’ என்றார் குஷ்பு.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close