Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மருத்துவர்களுடன் விஜயபாஸ்கர் ஆலோசனை - போராட்டம் குறித்து முக்கிய கருத்து

அரசு மருத்துவர்களின் போராட்டம் கைவிடப்படுகிறது என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

vijayabaskar


மருத்துவ முதுநிலைப் படிப்புக்கான 50 சதவிகித இடஒதுக்கீட்டை உயர் நீதிமன்றம் ரத்துசெய்து உயர் நீதிமன்ற தனி நீதிபதி உத்தரவிட்டார். இதைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் கடந்த 25 நாள்களுக்கும் மேலாக மருத்துவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தின் பிரதான கட்சிகள் அனைத்தும், மருத்துவர்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை முன்வைத்துள்ளன.

இதுதொடர்பான வழக்கு  உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. இரண்டு நீதிபதிகள் மாறுபட்ட கருத்துக்கள் தெரிவித்திருந்த நிலையில் இந்த வழக்கு மூன்றாவது நீதிபதிக்கு அனுப்பப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, 'மருத்துவர்கள் சேர்க்கையில் தேசிய மருத்துவ ஆணையத்தின் விதிகளே பின்பற்றப்பட வேண்டும்' என்று தீர்ப்பளித்தார்.

இந்தத் தீர்ப்பின் மூலம் அரசு மருத்துவர்களுக்கு முதுநிலைப் படிப்பில் அளிக்கப்பட்டு வந்த இடஒதுக்கீடு ரத்தாகிறது. மேலும் கிராம மற்றும் மலைப்பகுதிகளில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு வழங்கப்பட்டுவந்த சிறப்பு மதிப்பெண்களும் ரத்தாகிறது. இந்த தீர்ப்பையடுத்து மருத்துவர்கள் சங்கப் பிரதிநிதிகள் தலைமைச் செயலகத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரை சந்தித்து ஆலோசனையில் ஈடுபட்டனர்.

ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அரசு மருத்துவர்கள் சங்கத்தலைவர் செந்தில், 'இந்த தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும். மருத்துவ இடஒதுக்கீடு தொடர்பாக அவசரச் சட்டம் பிறப்பிக்க வேண்டும். மதிப்பெண் வழங்குவது குறித்து அரசு குழு அமைக்க வேண்டும்' என்றும் தெரிவித்தார்.

மருத்துவப்போராட்டம் குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், 'மருத்துவர்கள் போராட்டம் திரும்பப் பெறப்படுகிறது. இதுதொடர்பாக மேல்முறையீடு செய்வது பற்றி ஆலோசனைக்குப் பிறகு முடிவு எடுக்கப்படும்' என்று தெரிவித்துள்ளார். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close