நீட் தேர்வு 2017 : தமிழகத்தில் 8 மாநகரங்களில் நீட் தேர்வு!

இந்தியா முழுவதும் இன்று ’நீட்’ தேர்வு நடைபெறுகிறது. மருத்துவப் படிப்பு நுழைவுத்தேர்வு எனப்படும் நீட் தேர்வை 11.35 லட்சம் மாணவ,மாணவிகள் எழுதுகின்றனர். சி.பி.எஸ்.சி மேற்பார்வையில் நடைபெற உள்ள  இந்த தேர்வுக்காக, இந்தியா முழுவதும் 103 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

Neet TN
 

தமிழகத்தில் மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை, பிளஸ் டூ மதிப்பெண் அடிப்படையில் நடைபெற்று வந்தது. ஆனால் இந்த ஆண்டு முதல், உச்ச நீதிமன்ற உத்தரவுபடி மருத்துவ படிப்புகளுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வான நீட் மூலம் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.  தமிழ், ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட 10 மொழிகளில் நீட் தேர்வு நடைபெறுகிறது. 

தமிழகத்தை பொறுத்தவரை, சென்னை, கோவை, திருச்சி, மதுரை உட்பட 8 மாநகரங்களில் நீட் தேர்வு நடைபெறுகிறது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!