Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பிளாஸ்டிக் ஆலைகளில் தீ விபத்து - தீயை அணைக்க தீவிர முயற்சி

கோயம்புத்தூர் ஈச்சனேரி சிட்கோ பகுதியில் செயல்பட்டு வரும் பிளாஸ்டிக் தொழிற்சாலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க முயன்று வருகின்றனர்.

fire


கோயம்புத்தூர் சிட்கோ பகுதியில் பிளாஸ்டிக் தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. இன்று காலையில் திடீரென ஒரு பிளாஸ்டிக் ஆலையில் தீ பற்றியது. இந்த தீ அருகில் இருந்து மற்றொரு ஆலைக்கும் பரவியது.

மின் கசிவு காரணமாக தீ பற்றி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. தகவல் அறிந்து அப்பகுதிக்குத் தீயணைப்பு படையினர் விரைந்து வந்தனர். தீயை அணைக்கும் பணியில் அங்கு மூன்று தீயணைப்பு வாகனங்கள் ஈடுபட்டுள்ளன.

10-க்கும் மேற்பட்ட வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தீயணைப்பு வாகனங்களில் போதிய அளவுக்கு நீர் இல்லாததால் தீயை அணைக்கும் பணி தாமதமானதாகக் கூறப்படுகிறது.

எனவே தனியார் லாரி மூலம் நீரைப் பெற்று தீயை அணைக்கும் பணியில் வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். ஆலைக்குள் உள்ள சில பொருட்கள் மேலும், மேலும் வெடிப்பதால் தீயின் அளவு அதிகரிக்கரித்து வருகிறது.

இன்று விடுமுறை தினம் என்பதால் இந்த ஆலைக்குள் யாரும் சிக்கியிருக்க வாய்ப்பில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் பிளாஸ்டிக் ஆலையில் தீ பற்றியிருப்பதால் சுற்றுச் சூழல் பாதிக்கும் அபாயம் உள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close