Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

டாஸ்மாக்கிற்கு எதிராக திரும்பும் திருப்பூர் மக்கள்...வெடிக்கும் போராட்டங்கள்!

திருப்பூர் மாவட்டம் கஞ்சம்பாளையம் பகுதியில் அமைந்திருக்கும் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் நடத்திய போராட்டத்தால் கடை தற்காலிகமாக மூடப்படுவதாக திருப்பூர் வடக்கு தாசில்தார் சுப்பிரமணியம் அறிவித்துள்ளார்.

டாஸ்மாக்

டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக தமிழகமெங்கும் போராட்டங்கள் வெடிக்கத் தொடங்கியுள்ளன. இதில் முக்கியமாக திருப்பூர் மக்களின் போராட்டங்கள் தமிழகத்தை அதிரவைத்து வருகின்றன. அண்மையில் திருப்பூர் சாமளாபுரத்தில் அமையவிருந்த டாஸ்மாக் கடைக்கு எதிராக ஊர் மக்களின் போராட்டமும், அதற்கு காவல்துறை மேற்கொண்ட அடக்குமுறைகளும் பெரியளவிலான விவாதங்களை கிளப்பின. இதையடுத்து, திருப்பூர் மாவட்டம் முதலிப்பாளயத்தில் இருந்த டாஸ்மாக கடையை ஊர்மக்கள் அடித்து நொறுக்கினர். இதனிடையே இன்று கஞ்சம்பாளையத்தில் இருந்த டாஸ்மாக கடையை பொதுமக்கள் இழுத்துமூட செய்துள்ளனர்.

திருப்பூர்

திருப்பூர் கஞ்சம்பாளையத்தில் இருக்கும் டாஸ்மாக் 12 மணிக்கு திறக்கப்பட்டாலும், 24 மணி நேரமும் அங்கு மது விற்பனை ஜோராக நடைபெறுகிறதாம். இதனால் அங்குள்ள பெண்களும், குழந்தைகளும் பாதிப்படைவதாக கூறி இன்று பொதுமக்கள் போராட்டத்தில் இறங்கினர். இதையடுத்து காவல்துறை சமாதானம் பேசியும் அவர்கள் போராட்டத்தை கைவிடவில்லை. இறுதியாக திருப்பூர் வடக்கு தாசில்தார் சுப்பிரமணியம் 'டாஸ்மாக் கடை தற்காலிகமாக மூடப்படும்' என அறிவித்த பின்னர் போராட்டம் கைவிடப்பட்டது. இந்நிலையில், தற்போது மூடிவைக்கப்பட்டுள்ள டாஸ்மாக் கடைக்கு பாதுகாப்பாக காவல்துறையினர் நிற்க வைக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து, தாசில்தார் சுப்ரமணியம் கூறுகையில், 'பொதுமக்களின் போராட்டத்தால் தற்காலிகமாக இப்போது கடையை மூடியுள்ளோம். நிரந்தரமாக மூடும் உரிமை எங்களுக்கு இல்லை' என கூறியுள்ளார். டாஸ்மாக் கடைக்கு எதிராக பெரிய அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வரும் வேளையில், திருப்பூர் மக்களின் போராட்டங்கள் மாற்றத்துக்கான முதல்படியாய் அமைந்து வருகிறது.     
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement