நீட் தேர்வில் அனுமதி மறுப்பு - கண்ணீருடன் திரும்பிய மாணவிகள்..!

ஐந்து நிமிடம் காலதாமதாக சென்றதால் சேலத்தில் மூன்று மாணவ மாணவிகள் நீட் தேர்வு எழுத அனுமதிக்கப்படவில்லை. இதனால் அந்த மாணவர்கள் கண்ணீருடன் வீடு திரும்பினர். 


மருத்துவப் படிப்பில் சேர்வதற்கான நீட் தேர்வு இன்று இந்தியா முழுவதும் 104 நகரங்களில் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் மட்டும் சுமார் 88 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். தமிழ்நாட்டில் சென்னை, சேலம், கோவை,  திருச்சி உள்பட எட்டு மாநகராட்சிப் பகுதிகளில் நீட் தேர்வு நடைபெற்றது. சேலம் மூன்று ரோடு பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்ற நீட் தேர்வில் இரண்டு மாணவிகள் உள்பட மூன்று பேர் தேர்வு எழுத அனுமதிக்கப்படவில்லை.

ஐந்து நிமிடம் காலதாமதமாக வந்த காரணத்தினால் அந்த மூன்று பேரும் அனுமதிக்கப்படவில்லை. தருமபுரி, ஓசூர் பகுதிகளில் இருந்து அந்த மூன்று பேரும் வந்துள்ளனர். அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் அவர்களது பெற்றோர்கள், மற்ற மாணவர்களின் பெற்றோர்களும் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் காவல்துறையினர் வந்து சமாதானம் செய்ததைத் தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர். இருப்பினும் அந்த மூன்று மாணவர்களும் தேர்வுக்கு அனுமதிக்கப்படவில்லை. இதனால் மனமுடைந்த அவர்கள் கண்ணீருடன் வீடு திரும்பினர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!