வடபழனி தீவிபத்தில் பலியான நான்கு பேரின் குடும்பங்களுக்கு நிதியுதவி! முதல்வர் பழனிசாமி அறிவிப்பு | CM announces relief fund for people dead in fire accident

வெளியிடப்பட்ட நேரம்: 14:20 (08/05/2017)

கடைசி தொடர்பு:14:53 (08/05/2017)

வடபழனி தீவிபத்தில் பலியான நான்கு பேரின் குடும்பங்களுக்கு நிதியுதவி! முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

வடபழனி அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

தீ விபத்து

சென்னை வடபழனி அடுக்குமாடிக் குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு குழந்தைகள் உட்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர். படுகாயங்களுடன் ஐந்து பேர் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  தெற்கு சிவன் கோவில் தெருவில் மின்கசிவு ஏற்பட்டு இந்த விபத்து நேர்ந்துள்ளதாகக் கூறப்பட்டது. மேலும் குடியிருப்புப் பகுதியின் பார்க்கிங்கில் நிறுத்தப்பட்டிருந்த இரு சக்கர வாகனங்கள் தீயில் கருகிவிட்டன.

இதனிடையே தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்தார். மேலும், காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு சிறந்த முறையில் சிகிச்சை அளிக்க சென்னை மாவட்ட நிருவாகத்திற்கும், மருத்துவமனை அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் இவர்கள் அனைவரும் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்று  எனது விருப்பத்தை தெரிவித்துக் கொள்கிறேன் என்றும், இந்த  துயரச் சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும்; பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா 50,000 ரூபாயும்; சாதாரண காயமடைந்தவர்களுக்கு தலா 25,000 ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்" என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார்.

 


[X] Close

[X] Close