அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு நடத்திய அதிகாரி அதிரடி மாற்றம்

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு முன்னாள் தலைமைச் செயலாளர் ராமமோகனராவ் மற்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நடத்தப்பட்ட வருமானவரித்துறை ரெய்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக, விஜயபாஸ்கர் சம்பந்தப்பட்ட இடங்களில் நடத்தப்பட்ட ரெய்டுக்குப் பிறகு, ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், வருமான வரித்துறை புலனாய்வுப்பிரிவு கூடுதல் இயக்குநர் ராய் ஜோஸ், நாக்பூருக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

Rai Jose


சேகர் ரெட்டி, ராமமோகன் ராவ் ஆகியோர் மீதான வழக்குகளை ராய் ஜோஸ் விசாரித்து வந்தார். அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நடந்த ரெய்டிலும் ஜோஸ் முக்கியப் பங்கு வகித்து வந்தார்.  மத்திய அரசின் பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு, தொழிலதிபர்களின் நடவடிக்கைகளை தீவிரமாகக் கண்காணித்து வந்தது வருமான வரித்துறை. இந்தக் கண்காணிப்பில்தான் சேகர் ரெட்டி சிக்கினார். 150 நாள்களாக நடந்து வரும் ஐ.டி வேட்டையில், ராய் ஜோஸின் பங்களிப்பு மிக அதிகம். இதனால் ஜோஸ் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!