விவசாயிகள் பிரச்னை: தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

விவசாயிகள் நலனுக்காக என்னென்ன திட்டங்கள் இருக்கின்றன என தெரிவிக்க தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

sc

தமிழகத்தில் போதிய பருவ மழை பெய்யாததாலும், காவிரி நீர் திறக்கப்படாததாலும் விவசாயிகள் கடும் நெருக்கடியை சந்தித்து வருகின்றனர். இதையடுத்து விவசாயிகள் தற்கொலைகள் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இன்று வழக்கை விசரித்த நீதிபதிகள், 'விவசாயிகளின் நலனுக்காக என்னென்ன திட்டங்கள் உள்ளன என தமிழக அரசின் சட்டத்துறை மற்றும் விவசாயத் துறைச் செயலாளர்கள் பதிலளிக்க' உத்தரவிட்டுள்ளனர்.

இதையடுத்து, வழக்கு விசாரணையை ஜூன் மாதத்துக்கு ஒத்திவைத்துள்ளது உச்சநீதிமன்றம். இதனிடையே விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படவில்லை என அய்யாகண்ணு தாக்கல் செய்த மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. மேலும், மாநில அரசுகளிடம் இருந்து நிவாரணம் கிடைக்கவில்லை எனில் உயர்நீதிமன்றத்தை நாடுங்கள்' என நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!