மதுரை மேலூரில் தினகரனுக்கு ஆதரவாக ஆர்பாட்டம்! பெருந்திரளான மக்கள் பங்கேற்பு

தினகரனுக்கு ஆதரவாகவும்  மத்திய அரசை கண்டித்தும் மதுரையில் அவரது ஆதரவாளர்கள் கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அதிமுக

அ.தி.மு.க அம்மா அணியைச் சேர்ந்த டி.டி.வி தினகரன், இரட்டை இலை சின்னத்தைப் பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்டு, தற்போது திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, இவரது கைது நடவடிக்கையைக் கண்டித்து மதுரையில் சில தினங்களுக்கு முன்னர் அவரது ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினர்.

இந்தநிலையில் தற்போது, மதுரை மாவட்டம் மேலூர் பேருந்து நிலையத்தின் அருகில், தினகரனின் ஆதரவாளர்கள் கண்டன ஆர்பாட்டத்தில் இறங்கியுள்ளனர். மேலூர் தொகுதி முன்னாள் எம்எல்ஏ, ஆர்.சாமி தலைமையில் இந்த ஆர்பாட்டம் நடைபெறுகிறது. இதில் நாஞ்சில் சம்பத், கர்நாடகா அ.தி.மு.க செயலாளர் புகழேந்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர். மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த வாடிபட்டி, உசிலம்பட்டி உள்ளிட்ட ஊர்களில் இருந்து ஏராளமான பெண்கள் இந்தக் கூட்டத்துக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!