Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மோசடி வழக்கு: அமைச்சர் விஜயபாஸ்கரின் மாமனாருக்கு 3 ஆண்டு சிறை..!

மோசடி வழக்கு ஒன்றில், அமைச்சர் விஜயபாஸ்கரின் மாமனாருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, கோவை குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Vijayabaskar


தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சம்பந்தப்பட்ட இடங்களில், வருமானவரித்துறை கடந்த மாதம் அதிரடி சோதனை நடத்தியது. இதில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், பொது மக்களுக்கு பணம் கொடுப்பதற்கான ஆவணங்கள் பறிமுதல்செய்யப்பட்டன. இதையடுத்து, ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்துசெய்யப்பட்டது.


இந்த நிலையில், வணிக வளாகம் வாங்கிய வழக்கு ஒன்றில் ரூ.5 கோடி மோசடியில் ஈடுபட்டதாகக் கூறி, விஜயபாஸ்கரின் மாமனார் சுந்தரம் மீது, அவரது அண்ணன் துரைசாமி வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, விஜயபாஸ்கரின் மாமனார் சுந்தரம் மற்றும் அவரது சகோதரர் தனபால் ஆகியோருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்தத் தீர்ப்பு வந்த சில நிமிடங்களிலேயே, ரூ.20,000 செலுத்தி சுந்தரம் மற்றும் தனபால் ஜாமீன் பெற்றனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement