Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நீட் தேர்வு சோதனைகள் மனிதப் பண்பற்ற கொடுமைகள் - வைகோ சாடல்!

'நீட் தேர்வு மையங்களில் மாணவ, மாணவிகளுக்கு நடந்தது மனிதப் பண்பற்ற கொடுமைகள்!' என்று ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். 

vaiko


நீட் தேர்வு எழுதச் சென்ற மாணவ, மாணவிகளுக்கு கடுமையான சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதால், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கடும் மன வேதனைக்கு ஆளாகினர். மாணவர்கள் முழுக்கை சட்டையுடன் தேர்வு எழுத அனுமதி கிடையாது என்று ஏற்கெனவே விதிமுறைகள் இருந்துள்ளது. இது தெரியாத சில மாணவர்கள், முழுக்கை சட்டை அணிந்து தேர்வு எழுத வந்தனர். தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்படாததால், அவர்கள் சட்டையின் கைப்பகுதியை வெட்டிவிட்டு தேர்வு எழுதச்சென்றனர். மேலும் மாணவிகள் கம்மல், ஹேர்பின், கொலுசு போன்றவற்றை அணிந்துகொண்டு தேர்வு எழுதுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.

இந்தச் சம்பவங்கள், பரவலாக மாநிலம் முழுவதும் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.  கேரளாவில் மாணவி ஒருவரின் உள்ளாடையைக் கழற்றி, தேர்வுமைய அதிகாரிகள் சோதனைசெய்தனர். இதன்பின்னர், தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் விவாதங்களைக் கிளம்பியதோடு, பல்வேறு தரப்பினரிடமிருந்து கண்டனங்கள் எழுந்தன. இந்த நிலையில், நீட் தேர்வு கெடுபிடிகள்குறித்து ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக  அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், 'கல்வித்துறையைப் பொதுப் பட்டியலிலிருந்து நீக்கி, மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும். மாநில உரிமைகளை நசுக்கும் மத்திய அரசு, கல்வித்துறையில் ஆதிக்கம் செலுத்த அனுமதிக்கக்கூடாது. நீட் தேர்வு மையங்களில் அடிப்படை வசதிகளைக்கூட தமிழக அரசு செய்யவில்லை. நீட் தேர்வு மையங்களில் நடைபெற்ற இவ்வாறான சோதனைகள், மனிதப் பண்பற்ற கொடுமைகள்!' என்று தெரிவித்துள்ளார். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close