வெளியிடப்பட்ட நேரம்: 14:33 (09/05/2017)

கடைசி தொடர்பு:15:21 (09/05/2017)

மே 12 முதல் வேளாண் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்!

'மே 12-ம் தேதி தொடங்கி ஜூன் 4-ம் தேதி வரை வேளாண் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்' என்று தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ராமசாமி அறிவித்துள்ளார். 

agriculture university


தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில், வரும் கல்வியாண்டில் உறுப்புக் கல்லூரிகளுக்கான இடங்கள், இணைப்புக் கல்லூரி இடங்கள் உள்பட 1,820 இடங்களுக்கு மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம். 'இளங்கலைப் படிப்புகளுக்கு மே 12-ம் தேதி தொடங்கி ஜூன் 4-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். அதற்கான விண்ணப்பங்களை http://www.tnau.ac.in/admission.html என்ற இணைய தளத்தில் இருந்து தரவிறக்கம் செய்துகொள்ளலாம். ஜூன் 12-ம் தேதி தர வரிசைப் பட்டியல் வெளியிடப்படும். மேலும், ஜூன் 16-ம் தேதி கலந்தாய்வு நடைபெறும்' என்று வேளாண் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ராமசாமி அறிவித்துள்ளார்.